2/28/2011 2:57:49 PM
'அகராதி’ பட இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியது: அண்ணன் தங்கை பாசம், வில்லனின் பண ஆசையால் நடக்கும் விபரீதம் என கமர்ஷியல் த்ரில்லர் கதை. ஹீரோ பிரதீப். ஹீரோயின் ஓவியா. அண்ணன் தங்கையாக பவன், மோனிகா. வில்லன் ஆர்.வி.டி.ராஜ்குமார். இதன் ஷூட்டிங் ஈசிஆர் கடற்கரையோர பங்களாவில் நடந்தது. கண்ணாடிகள் உடைவது போல் ஒரு காட்சி. இதில் ஓவியா நடிக்க வேண்டும். கண்ணாடிகள் நொறுங்குவதற்காக அதில் வெடி வைத்திருந்தோம். இதை ஓவியாவிடம் சொல்லி காதில் பஞ்சு வைத்துக்கொள்ள எச்சரித்தேன். அவர் மறுத்துவிட்டார். காட்சியின்போது பாம் வெடித்த சத்தம் காதை துளைத்தது. விபத்து நடந்துவிட்டதோ என அலறியபடி கரையோரம் வசித்த குடிசை மக்கள் ஓடிவந்து விசாரித்தனர். காட்சி பற்றி விளக்கிய பிறகு புறப்பட்டு சென்றனர். இக்காட்சியில் ஓவியா அலறிவிட்டார். காதும் அடைத்துக் கொண்டது. சிறிதுநேரம் அதிர்ச்சியில் இருந்தார். நீண்ட நேரத்துக்கு பிறகே சகஜ நிலைக்கு வந்தார். அவரது துணிச்சலை படக் குழுவினர் பாராட்டினர். அதுபோல் கோல்குண்டாவில் நடந்த ஷூட்டிங்கில் 80 அடி பள்ளத்தாக்கில் மோனிகா கயிற்றில் தொங்கிய காட்சி படமாக்கியபோது அவரும் டூப் போடாமல் நடித்தார்.
Post a Comment