ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லட்சுமி ராய்

3/21/2011 10:28:35 AM

'அவதார்' பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்க இருப்பதாக லட்சுமி ராய் கூறியுள்ளார். பிரியதர்ஷன் இயக்கும், 'அரபியும் ஒட்டகமும் பி. மாதவன் நாயரும்' என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி ராய். இந்த படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் உள்ள அல் கதீனா பாலைவனத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பாலைவனத்தில் செல்லும் சிறப்பு ஜீப் ஸ்பாட்டுக்கு வந்து நின்றது. இதையடுத்து பிரியதர்ஷன் உட்பட படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ச்சிக்கு காரணம் ஹாலிவுட் பட இயக்குனர், கேமரூன் அதிலிருந்து இறங்கியது தான். இதுபற்றி பிரியதர்ஷன் கூறும்போது, 'அபுதாபி மீடியா சப்மிட்' என்ற கருத்தரங்கில் 3-டி பற்றி பேச வந்திருந்தார் ஜேம்ஸ் கேமரூன். அவர் வந்திருப்பதை அறிந்து முந்தைய நாளே டின்னருக்கு அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தேன். அப்போது, 'எப்படி நீங்கள் ஷூட்டிங் நடத்துகிறீர்கள் என்பதை அறிய ஆசை. நான் செட்டுக்கு வருகிறேன்' என்றார். இதையடுத்து மறுநாள் செட்டுக்கு வந்ததும் எங்களுக்கு புல்லரித்துவிட்டது. பிறகு எல்லோரையும் பாராட்டிவிட்டு சென்றார்' என்று கூறினார்.

லட்சுமி ராயிடம் கேட்டபோது கூறியதாவது: பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தேன். அப்போது அதிக நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. இந்திய சினிமா பற்றியும் அதற்கான வியாபாரம் பற்றியும் கேட்டார். அவரது அனைத்துப் படங்களுக்கும் நான் ரசிகை என்றேன். அவருடன் இணைந்து பணிபுரிவது பற்றி கேட்டேன். 'அவதாரி'ன் அடுத்த பாகம் உட்பட சில படங்களை அவர் இயக்க இருக்கிறார். இதில் ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. விரைவில் கலிபோர்னியாவில் கேமரூனை மீண்டும் சந்தித்து பேச இருக்கிறேன். இதையடுத்து ஹாலிவுட்டில் இருந்து அறிவிப்பு வந்தாலும் வரும். இவ்வாறு லட்சுமி ராய் கூறினார்.


Source: Dinakaran
 

Post a Comment