4/4/2011 1:44:15 PM
சென்னை: சில படங்களைத் தவிர, ஒரே மாதிரி கேரக்டரில் நடிக்கவில்லை என்றார் ஜெனிலியா.
இதுபற்றி அவர் கூறியதாவது:
தெலுங்கில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யும் போது, அங்கு நடித்த அதே கேரக்டரை இங்கும் செய்ய வேண்டிய நிலை வரும். அது தவிர்க்க முடியாதது. இதை வைத்துக்கொண்டு ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. இப்போது நடித்துள்ள 'உருமி' மலையாளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது. இதில் என் நடிப்பை எல்லாரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்துக்காக களரி சண்டை கற்றேன். படத்தில் அதைப் பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. இதையடுத்து விஜய்யுடன் 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு சீரியஸான கேரக்டர். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.
Post a Comment