தாம்பரம் ரயில் நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கிய ஆர்யா,சமீரா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கிய ஆர்யா, சமீரா

4/4/2011 1:46:36 PM

சென்னை: லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'வேட்டை'. ஆர்யா, சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்து வந்தது. திட்டமிட்ட நாளுக்கு முன்பே  முதல் ஷெட்யூல் முடிந்ததால் அங்கிருந்து வியாழக்கிழமை சென்னை திரும்பினர். ஆர்யாவுக்கும் சமீரா ரெட்டிக்கும் மதுரையில் இருந்து சென்னை வர விமான டிக்கெட் எடுத்திருந்தனர். முதல் நாள் ரயிலில் தயாரிப்பாளர் போஸ், லிங்குசாமி ஆகியோர் செல்ல முடிவு செய்திருந்தனர். தாங்களும் ரயிலில் வருகிறோம் என்று ஆர்யாவும் சமீராவும் கூறினார்

. இதையடுத்து காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் ஏறி வந்துகொண்டிருந்தனர். ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாமல் இருக்க ஆர்யா, தொப்பி அணிந்திருந்தார். சமீரா தலையில் ஒரு துணியை போட்டிருந்தார். காலையில் எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கினால் ரசிகர்கள் தொந்தரவு இருக்கும் என்று தாம்பரத்தில் இறங்க முடிவு செய்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவின் கார் தாம்பரத்தில் காத்திருந்தது. வெள்ளிக்கிழமை காலை 7.30&க்கு ரயிலில் இருந்து இருவரும் இறங்கினர். அப்போது திடீரென்று ரசிகர்கள்  அடையாளம் கண்டுகொண்டு சுற்றி வளைத்தனர்.

 அவர்களிடம் இருந்து வெளியேற இருவரும் சிரமப்பட்டனர். ஆர்யாவின் டிரைவரும் நண்பர் ஒருவரும் உள்ளே வந்து இருவரையும் ரசிகர்களிடம் இருந்து மீட்டனர். இச்சம்பவத்தால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Source: Dinakaran
 

Post a Comment