பரிமளா திரையரங்கம் என்ன கதை?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பரிமளா திரையரங்கம் என்ன கதை?

4/4/2011 1:45:00 PM

சென்னை: வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், ஸ்ரீமன் தயாரிக்கும் படம் 'பரிமளா திரையரங்கம்'. ஜசரிவேலன் பேரன் விகாஸ் ஹீரோ. சனுஷா ஹீரோயின். மற்றும் விவேக், கிஷோர், இளவரசு உட்பட பலர் நடிக்கின்றனர்.

படத்தை இயக்கும் சரவணஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:
இது சினிமா தியேட்டர் சம்பந்தப்பட்ட கதை. ஆபரேட்டர் இளவரசுவின் மகன் விகாஸ், தியேட்டர் விலை பேசப்படுவதை அறிந்து கலங்குகிறார். பிறகு அத்தியேட்டரை நவீனப்படுத்தி, அதை எப்படி வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கதை. தமிழகம் முழுவதும் தேடியதில், கதைக்கு பொருத்தமான தியேட்டர் வேடசந்தூரில் கிடைத்தது. பல லட்ச ரூபாய் செலவில் தியேட்டரை மாற்றி, படமாக்கினோம்.  காதல் காட்சிகளில் விகாஸ், சனுஷா கெமிஸ்ட்ரி ரசிகர்களை வசியப்படுத்தும்.


Source: Dinakaran
 

Post a Comment