5/23/2011 2:29:52 PM
நுரையீரல் பாதிப்பால் உடல் நலம் குன்றிய ரஜினிகாந்த், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவ மனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராகவேந்திரா லாரன்ஸ், ஆவடியில் தான் கட்டியுள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினி குணம் அடைய வேண்டி 108 பால்குட அபிஷேகம் செய்தார். பின்னர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி லாரன்ஸ் கூறும்போது, 'ரஜினி குணமடைய வேண்டுமென்று 108 பால்குட அபிஷேகம் நடந்தது. 2000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சரத்குமார் உட்பட பலர் பிரர்த்தனையில் கலந்துகொண்டனர்' என்றார். பாலிவுட் பிரார்த்தனை: ரஜினி விரைவில் குணம் அடைய வேண்டி பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஷாருக்கான், பாபி தியோல், பிரியங்கா சோப்ரா ஆகியோர் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். Ôரஜினிக்கு உடல்நலமில்லை என்று அறிந்து அப்செட் ஆகிவிட்டேன். அவர் விரைவில் குணம் அடைய நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும். 6 நாட்களுக்கு முன்பு அவருடன் தொலைபேசியில் பேசினேன். நன்றாக இருப்பதாக கூறினார்ÕÕ என்றார் தர்மேந்திரா.
Post a Comment