'எனது பிரியமான ரஜினி விரைவில் குணமடைய வேண்டும்!'- ஷாருக் உருக்கம்

|

Tags:



மும்பை: “எனது பிரியமான ரஜினி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்த் கூறியுள்ளார்.

பாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் ரஜினி குணமடைய பிரார்த்தனை செய்தும் வாழ்த்துக்கள் கூறியும் வருகின்றனர்.

பழம்பெரும் நடிகர் தேவ் ஆனந்த், “‘எனது பிரியமான ரஜினி விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் ஸாரூக்கான் தனது ‘ட்விட்டர்’ தளத்தில், “கிரிக்கெட் போட்டியிலிருந்து நான் திரும்பியபோது, ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கவலைப்பட்டேன். அவர் எங்கள் சூப்பர் ஹீரோ. கடவுள் அருளால் அவர் விரைவில் குணம் அடைவார்’ என்று ஷாருக்கான் எழுதி உள்ளார்.

ரஜினி விரைவில் குணம் அடைய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ரஜினி நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ரஜினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது அன்பர்கள் அனைவரையும் மிகவும் பாதித்துள்ளது. அவரிடம் நான் பேசினேன். அவர் மனைவி லதாவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளேன். ரஜினி குணமடைந்து வருவதாக லதா என்னிடம் கூறினார். மிக விரைவில் அவர் நலம்பெற்று வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

 

Post a Comment