மைனா பட கன்னட ரீமேக் படப்பிடிப்பில் காயம்-நடிகை பாமா காயம்

|


கன்னடத்தில் ரீமேக் ஆகி வரும் மைனா பட ஷூட்டிங்கின்போது நடிகை பாமாவுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. அவரது கால்களில் கண்ணாடிகள் உடைந்து குத்தி விட்டன.

தமிழில் அமலா பால், விதார்த் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் மைனா. இப்படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் விதார்த் வேடத்தில் கணேஷ் என்பவரும், அமலா பால் வேடத்தில் நடிகை பாமாவும் நடிக்கின்றனர்.

பாமா தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான பாமா இப்போது கன்னடத்தில் நடித்து வருகிறார்.

கன்னட மைனா படத்தின் ஷூட்டிங் மூணாறில் உள்ள காட்டுப் பகுதிகளில் படமாக்கி வருகின்றனர். பஸ்சில் நாயகனும், நாயகியும் பயணிப்பது போலவும், அதில் வரும் நடனக் காட்சிக்குப் பின்னர் பஸ் விபத்துக்குள்ளாவது போலவும் படமாக்கினர்.

அப்போது பஸ் கண்ணாடி உடைந்து பாமாவின் கால்களில் குத்தி விட்டது. இதனால் ரத்தம் கொட்டியது. அதேபோல கணேஷின் கண்களிலும் கண்ணாடித் துகள்கள் பாய்ந்து விட்டன.

இதையடுத்து இருவரையும் மூணாறு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் இருவரும் படப்பிடிப்புக்குத் திரும்பினர்.

தமிழில் மைனா என்ற பெயரில் வெளியான இப்படம் கன்னடத்தில் ஷைலு என்ற பெயரில் படமாகிறது.
 

Post a Comment