மன உளைச்சல்... தற்காலிகமாக சினிமாவிலிருந்து விலகல்! - சோனா அறிவிப்பு


சென்னை: எஸ்பிபி சரண் செய்த பாலியல் பலாத்கார முயற்சி, அது தொடர்பாக தான் கொடுத்த புகாருக்கு போலீசார் காட்டிய ரியாக்ஷன், சமரசமாகப் போகுமாறு வந்த மிரட்டல்கள் போன்றவற்றால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் கொஞ்சகாலத்துக்கு சினிமாவில் நடிக்கவே மாட்டேன், என்றும் நடிகை சோனா அறிவித்துள்ளார்.

மங்காத்தா மது விருந்தில் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக போலீசுக்கு போனார். இவ்வழக்கு நீதிமன்றத்துக்கும் போனது. போலீசார் கைது செய்யாமல் இருக்க எஸ்.பி.பி. சரண் முன் ஜாமீன் பெற்றார்.

பாலியல் பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரத்தை சோனா போலீசில் அளித்ததால் வழக்கு சூடு பிடித்தது.

மது விருந்தில் பங்கேற்ற வெங்கட் பிரபு, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி போன்றோரிடம் போலீசார் விசாரணையை துவங்கினர். இதனால் சோனா, சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருகட்டத்தில், போலீசார் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் சோனாவை சமரசமாக போகும்படி நிர்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் எஸ்பிபி சரணுக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தினால் கைது செய்து உள்ளே அடைத்துவிடுவோம் என போலீஸ் சோனாவை பகிரங்கமாக மிரட்டியது.

இதனால், அடுத்த நாளே சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தார் என்றும், இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சோனாவே அறிவித்தார். எஸ்ப்பி சரண் எதுவும் கூறவில்லை.

நடந்த சம்பவங்கள் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறிவந்தார் சோனா. உடனடியாக வெளிநாடு போய், பின்னர் ஹைதராபாத்தில் தங்கி நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது இப்போதைய முடிவு குறித்து சோனா கூறுகையில், "எனக்கு வந்தது போல் எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். மானபங்கம் செய்தார்கள். இதை எதிர்த்து தனி ஆளா நின்னு போராடினேன். என்பக்கம் உண்மையிருப்பதை அறிந்து பெண்கள் அமைப்புகள் ஆதரவுகரம் நீட்டின. இடையில் பல விஷயங்கள் நடந்தன. ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டது. வழக்கை வாபஸ் பெறுகிறேன். வக்கீலை வைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன். ஓரிரு நாளில் அது முடிந்து விடும்.

அதன் பிறகு வெளிநாடு போகப் போகிறேன். மன உளைச்சலில் இருந்து விடுபட அமைதியும், ஓய்வும் தேவை. அதற்காகத்தான் வெளிநாடு செல்கிறேன். ஒரு வருடம் தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகி இருக்கப் போகிறேன்.

வேண்டாம் வெங்கட்பிரபு படம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் புதுப்பட மொன்றை தயாரிக்க முடிவு செய்து இருந்தேன். இதற்காக அவரிடம் ஒப்பந்தமும் போட்டு இருந்தேன். அந்த படத்தை இனி தயாரிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெங்கட் பிரபுவும் நானும் சுமூகமாக பேசி விலகிவிட்டோம். இதனால் கொஞ்ச நாட்கள் தூக்கமே வராமல் தவித்தேன். மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன். உடல் நிலை வேறு பாதித்துவிட்டது. சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வில் இருக்கப் போகிறேன், என்றார்.
 

வாகை சூட வா - திரையில் ஒரு இலக்கியம்


-எஸ் ஷங்கர்

நடிப்பு: விமல், கே பாக்யராஜ், இனியா, தம்பி ராமையா, பொன்வண்ணன், தென்னவன், நம்பிராஜன்

இசை: டி ஜிப்ரான் (அறிமுகம்)

ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்

எழுத்து - இயக்கம்: ஏ சற்குணம்

தயாரிப்பு: எஸ் முருகானந்தம், என் பூரணா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

மக்களை மகிழ்விப்பது வெகுஜன சினிமா. கூடவே மாற்றத்துக்கான சிறு வித்தையாவது பார்ப்பவர் மனதில் அது விதைத்துச் சென்றால் ஒரு படைப்பு என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. அந்த வகையில் சற்குணம் உருவாக்கியுள்ள வாகை சூட வா, 'சிறந்த படைப்பு'!

கொளுத்தும் வெயிலில் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானம் கவிந்து, பெருமழை பிடித்துக் கொள்கிறது. மண் வாசம் மனதை நிறைக்க, சின்ன தளும்பலுடன் நினைவுகள் பின்னோக்கிப் போய் பால்ய மழைக்காலங்களையும், அந்தப் பருவத்தில் அனுபவித்து மகிழ்ந்த சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தொட்டுத் தடவி மகிழத் தொடங்கிவிடும். சற்குணத்தின் இந்த முயற்சியில் அந்த பழைய மனப்பதிவுகளைத் தடவிப் பார்த்த அனுபவம்!

சினிமாவின் முதல்காட்சி இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும், காதலர்கள் இப்படித்தான் பாடிக் கொள்ள வேண்டும், நகைச்சுவை இப்படித்தான் பித்துக்குளித்தனமாக இருக்கவேண்டும், க்ளைமாக்ஸ் இப்படித்தான் முடிய வேண்டும்... ம்ஹூம்... இந்த கோடம்பாக்க விதிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை இந்த மனிதர்!

திரையில் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளை. 'வாத்தியாரை' அடிக்கிறார் நம்பியார். மணலைக் குவித்து உட்கார்ந்து படம் பார்க்கும் கூட்டத்தில், தோளில் வேட்டைத் துப்பாக்கியோடு ஒரு நரிக்குறவர். வாத்தியாரை அடிக்கும் நம்பியாரை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 'வாத்தியாரே ஒதுங்கிக்கோ' என்று கூவியபடி திரையைச் சுடுகிறார் அந்த நரிக்குறவ ரசிகர். திரை எரிகிறது, அவர் மனம் குளிர்கிறது!

-அறுபது எழுபதுகளில் இந்தக் காட்சியை பார்த்திராத, அனுபவித்திராத சினிமா ரசிகர்களோ, டூரிங் டாக்கீசுகளோ அனேகமாக தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை! அந்த யதார்த்தத்தோடு தொடங்கும் படம், இறுதிக் காட்சியில் அறியாமையின் இருளிலிருந்து விடுபட்ட சிறுவர்கள், தங்களை ஏய்க்கப் பார்த்தவனிடம் உழைப்புக்கான ஊதியத்தை எண்ணி வாங்கும் போது ஹீரோ ஆனந்தக் கண்ணீருடன் சிரிக்கிறாரே.... அதுவரை தொடர்கிறது... ஹேட்ஸ் ஆஃப் சற்குணம்!

1966. அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டம்.

'ஒரு சர்க்கார் உத்தியோகம் வேண்டும். அதற்கு முன் கிராம சேவக் தன்னார்வ அமைப்பு மூலம் ஏதோ ஒரு கிராமத்தில் தற்காலிக வாத்தியார் வேலை செய்தால் சொற்ப சம்பளமும் ஒரு சான்றிதழும் கிடைக்கும். இந்த சான்றிதழ் இருந்தால் அரசு வேலை எளிதில் சாத்தியம்,' - பத்திரம் எழுதி தன்னைப் படிக்க வைத்த அப்பாவின் (பாக்யராஜ்) இந்த யதார்த்தக் கனவை நனவாக்க கண்டெடுத்தான் காடு கிராமத்துக்கு வருகிறார் வேலுத்தம்பி (விமல்).

செங்கல் சூளையில் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் மக்களின் வாரிசுகளுக்கு பாடம் சொல்லித் தர முயற்சிக்கிறார். அறியாமை இருளிலிருந்து அவர்கள் வெளிவராவிட்டாலும், படித்த பட்டணத்து இளைஞனான வாத்தியாரின் வெள்ளந்தித்தனத்தை தோலுரித்து விடுகிறார்கள்.

படித்தவன் பிழைப்பைக் கெடுக்கப் பார்க்கிறான் என்ற நினைப்பில், வாத்தியாரை 'சேர்த்துக் கொள்ளாமல்' இருக்கும் அந்த மக்கள், படிப்பறிவில்லாத தங்களை, ஒரு 'ஆண்டை' எப்படியெல்லாம் ஏமாற்றுகிறான் என்பதை உணர்ந்த கணத்தில், வாத்தியாரின் கைகளில் தங்கள் பிள்ளைகளை ஒப்புவிக்கிறார்கள். கிராமத்தில் குறும்புத்தனம் செய்த மழலைகள், மெல்ல மெல்ல பல்பம் வைத்து சிலேட்டில் கிறுக்க ஆரம்பிக்கிறார்கள். கூடவே வாத்தியாருக்கு ஆக்கிப் போட வந்து, தன்னை அவருக்குத் தரத் தயாராக நிற்கும் மதி (இனியா).

தனது கொத்தடிமைகள் புதிதாக கற்க ஆரம்பித்துள்ள கல்வி தனக்கெதிரான புரட்சிக் கேள்வியாக மாறும் நாள் நெருங்குவதை உணர்ந்த ஆண்டைக்கு ஆத்திரம் தாங்கவில்லை. அந்த மக்களையே அழிக்க முயல, ஆபத்பாந்தனாய் அவர்களைக் காக்க வருகிறார் வாத்தியாரின் தந்தை. வந்தவர் அரசு வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை வாத்தியாரிடம் தர, உற்சாகத்தோடு வேலையில் சேரப் புறப்படுகிறார் வாத்தியார்.

பாதிக் கலைந்த உறக்கத்தில் தவிப்பர்களைப் போல, அரைகுறை கல்வியோடு கண்முன் நிற்கும் அந்த மழலைகளிடம் கண்ணீருடன் விடைபெறுகிறார் வாத்தியார்... அரசு வேலையில் சேர்ந்தாரா.... அந்த மழலையரின் கல்வி என்ன ஆனது.. மதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? போன்றவை ஒரு அழகிய நாவலின் நிறைவான அத்தியாயம் மாதிரி சொல்லப்பட்டுள்ளன.

1966-தான் கதை நிகழும் காலம் என்று முடிவு செய்த இயக்குநர், அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமுறை, உணவு வழக்கம், விவசாயம், விளையாட்டு, சினிமா... ஒன்றிலும் சிறு குறைகூட காண முடியாத அளவுக்கு பார்த்துப் பார்த்து விஷயங்களைச் சேகரித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளுக்குத் தெரியாத விஷயங்களை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வழக்கொழிந்துபோன கவலைப் பாசனம், கருவாமணி, பிரிமனை, மக்கேரி, தவலை (தண்ணீர்குடம்), பொட்டல்வெளி என்பதற்கு சரியான உதாரணமாய் ஒரு கிராமம், பனையிலேறும் மீன், செங்கல் சூளைகள், கிராமத்து உணவுகள் போன்றவற்றையெல்லாம் திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. ஒரு இலக்கியவாதியின் செய்நேர்த்தி!

படத்தில் ஹீரோ விமலையும் தாண்டி கண்ணிலேயே நிற்பவர்கள் இருவர்... நாயகி இனியா மற்றும் நான்கே காட்சிகளில் வந்தாலும் மனசைத் தொடும் பாக்யராஜ்.

விமலிடம் பணத்தைப் பிடுங்க அப்பா தம்பி ராமையாவுடன் சேர்ந்து நடத்தும் நாடகமும், தன் காதலைச் சொல்லும் உத்தியாய், 'எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க' என்ற பொய்யைச் சொல்லி, அதற்கு விமல் முகம் போகும் போக்கைப் பார்த்து சந்தோஷத்தில் ஆடிக் கொண்டே வருவதும்... முதல் தரம். பாரதிராஜாவின் நாயகிகளைக் கண்முன் நிறுத்தியது இந்தக் காட்சிகளில் இனியாவின் நடிப்பு.

மகன் சர்க்கார் வேலைக்கு ஏன் போக வேண்டும் என்பதை மூச்சைப் பிடித்துக் கொண்டு சொல்லும் முதல் காட்சியிலும், அதே மகன் தன் கனவை நிறைவேற்றாமல் செல்லும்போது வழியனுப்பும் காட்சியிலும் மனதைப் பிசைகிறது பாக்யராஜ் நடிப்பு.

'டூ நாலெட்டாக' வரும் தம்பி ராமையா, நம்பிராஜன், பொன்வண்ணன், அந்த குருவிக்கார கிழவனாக வரும் குமரவேலும் நடிகர்களாகவே தெரியவில்லை.. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கண்டெடுத்தான் காட்டுவாசிகள்தான் அவர்கள்!

இத்தனை நாளும் நாம் ஆண்டையிடம் இப்படித்தான் ஏமாந்து போனோமா என்ற தவிப்புடன், சூளையில் கிடக்கும் தன் மகளை தரதரவென இழுத்துப் போய் விமலிடம் ஒப்படைத்து, 'வாத்தியாரே இதை உங்கையிலே ஒப்படைக்கிறேன்... எதையாவது கத்துக் கொடுங்க,' என அந்தத் தாய் கதறும்போது கண்களில் நம்மையும் மீறி 'மளுக்'கென எட்டிப் பார்க்கிறது கண்ணீர்!

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு, காலச் சக்கரத்தில் ஏற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டுகிறது. ஜிப்ரான் என்பவர் புதிய இசையமைப்பாளர் என்கிறார்கள். நம்பத்தான் முடியவில்லை. பின்னணி இசையும், 'போறானே...', 'சரசர சாரக்காத்து...' பாடல்களும் லயிக்க வைக்கின்றன.

களவாணியில் தன்னை நிலை நிறுத்த ஒரு திரைக்கதையை உருவாக்கி வெற்றிபெற்ற சற்குணம், இந்தப் படத்தில் தமிழ் சினிமாவையே நிமிர்த்தும் அசத்தலான திரைக்கதையை உருவாக்கி வாகை சூடியிருக்கிறார்... வாழ்த்துக்கள்!
 

கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!


கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் நிகிதா.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நிகிதா வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படம் கிடைத்திருக்கிறதே, அதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்களேன் என்தற்கு,

நான் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தற்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

கார்த்தி தற்போது சகுணியில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் சூரஜ் தன் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

தர்ஷன் பிரச்சனை முடிந்தபிறகு நிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்...
 

ஹாரிஸ் ஜெயராஜ் கச்சேரியை ஒத்தி வைத்த மழை!


மழை காரணமாக, சென்னையில் தான் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியை ஒத்திப் போட்டார் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் தலைப்பில் சென்னை மற்றும் கோவையில் இசைக் கச்சேரி நடத்தப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார். சர்வதேச தரத்தில், நல்ல ஒலியமைப்பில் உள்ளூர் ரசிகர்களுக்கு தான் அளிக்கும் திரைவிருந்து என அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

டிக்கெட்டுகள் மளமளவென விற்பனையாகிவந்த நிலையில், சென்னையில் திடீர் திடீரென பெரும் மழை வெளுத்துக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை வேளைகளில் கச்சேரி நடத்துவது சென்னையில் சாத்தியமில்லாததாகிவிட்டது.

எனவே சென்னையில் வரும் அக்டோபர் 8-ம் தேதியும், கோவையில் ஏற்கெனவே அறிவித்தது போல அக்டோபர் 16-ம் தேதியும் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் என தனது பிஆர்ஓ நிகில் மூலம் அறிவித்துள்ளார் ஹாரிஸ்.

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இந்த இசை நிகழ்ச்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.
 

நிஜத்தில் ஹீரோவான கன்னட நடிகர் ஜக்கீஷ்... 2 செயின் திருடர்களை விரட்டிப் பிடித்தார்!


பெங்களூர்: இரண்டு செயின் பறிப்புத் திருடர்களை மோட்டார் சைக்கிளில் போய் விரட்டிப் பிடித்து பொதுமக்களிடம் பாராட்டுப் பெற்றுள்ளார் பிரபல கன்னட நடிகர் ஜக்கீஷ்.

நேற்று மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கன்னட சினிமாவில் பிரபல நகைச்சுவை - குணச்சித்திர நடிகராக இருப்பவர் ஜக்கீஷ்.

மாலை 5.30 மணியளவில், 18வது க்ராஸ் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு மொபைலில் பேசிக் கொண்டிருந்தார் நடிகர் ஜக்கீஷ்.

அப்போது சாலையிலஸ் ஒரு பெண் கதறிக் கொண்டும், காப்பாற்றக் கோரியும் சத்தமெழுப்பியது அவர் காதில் விழுந்தது. உடனே சாலையில் எட்டிப் பார்த்தார். அப்போது ஒரு 17 வயது பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் பறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணோ சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

கிட்டத்தட்ட 20 அடி தூரம் ரோடில் அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டே போயிருக்கிறார்கள். அப்படியும் விடவில்லை. உடனே அந்தத் திருடர்களில் ஒருவன் பெண்ணை தள்ளிவிட்டு சங்கிலியைப் பறிக்க பைக் பறந்தது. அதற்குள் அந்தப் பெண்ணருகில் ஓடிவந்த ஜக்கீஷ், நடந்ததைப் புரிந்து கொண்டு, போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு அருகிலிருந்தவர்களிடம் சொன்னார்.

மேற்கொண்டு நடந்ததை அவரே சொல்கிறார்:

" அந்தப் பக்கம் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விஷயத்தைச் சொல்லி பைக் கேட்டேன். அவரும் மறு பேச்சின்றி உடனே தந்தார். அடுத்த நொடி நான் பறந்தேன் பைக்கில். எனக்கும் அவர்களுக்கும் 500 மீட்டர் கேப். வேகமாகப் போய், அவர்கள் பைக்குக்கு முன் நான் மறிக்க அவர்கள் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் பலமாகப் பிடித்துக் கொண்டேன். ஒருவன் மட்டும் சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து செயினை கைப்பற்றினேன். அந்தப் பெண்ணிடம் அந்த செயினை ஒப்படைத்தபோது, அவள் அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் இதற்கு முன் பார்க்காதது," என்றார்.

ஆரம்பத்தில் இது ஏதோ சினிமா ஷூட்டிங் என நினைத்துவிட்டார்களாம் மக்கள். அவர்களிடம் கன்னடத்தில் "இது ஷூட்டிங் அல்ல' என்று பல முறை விளக்கிக் கூறவேண்டியிருந்ததாம். விஷயம் புரிந்ததும், அசந்துபோய் ஜக்கீஷைப் பாராட்டினார்களாம் பொதுமக்கள்.

பின்னர் வழக்கம்போல போலீஸ் கடைசியில் வந்து, திருடர்கள் இருவரையும் பிடித்துள்ளது. பிடிபட்ட இரு இளைஞர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

"ஒரு இளைஞன் ஆஸ்டின் கல்லூரியில் பியூசி படிப்பவன். இன்னொரு இளைஞர் ஷேசாத்ரிபுரம் கல்லூரியில் பியூசி படிக்கிறான்," என்றார் இந்த வழக்கை விசாரிக்கும் பெங்களூர் துணை கமிஷனர் ரேவண்ணா.

ஜக்கீஷ் இதுபோல நிஜத்திலும் உதவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே பெங்களூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்றி தவறி ட்ராக்கில் விழவிருந்த ஒருவரை, பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளார் ஜக்கீஷ்.
 

ரஜினி அங்கிளைச் சந்தித்தேன்... சூப்பரா இருக்கார்! - மோகன்பாபு மகள்


ரஜினியை வீட்டில் போய் சந்தித்தேன். அவர் நலமுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் உள்ளார் என்று நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்ற ரஜினி கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பிறகு அவர் போயஸ் கார்டன் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு ஆகியவற்றில் ஓய்வெடுத்து வருகிறார்.

இடையில் ராணா பட வேலைகளையும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனிக்கிறார். படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள், படத்தின் இசை, காட்சியமைப்புகளில் மாற்றம், உடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் போன்றவற்றை ரஜினி ஆலோசனையுடன் இயக்குநர் ரவிக்குமார் முடிவு செய்து வருகிறார்.

இடையில் ரஜினி தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள், வைரமுத்து, எஸ்பி முத்துராமன் போன்ற திரையுலகப் பிரமுகர்களை மட்டும் சந்தித்துப் பேசினார். ஆனால் அதுகுறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய பிரமுகருமான மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி, சில தினங்களுக்கு முன் ரஜினியை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் லட்சுமி குறிப்பிடுகையில், "ரஜினி அங்கிளை சென்னையில் சந்தித்தேன். சூப்பராக இருக்கிறார். முன்பைப் போலவே உற்சாகமாகவும் நலமாகவும் உள்ளார். அவரை பார்த்ததே மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்ம சூப்பர் ஸ்டார் அதே மாதிரி ஸ்ட்ராங்காக திரும்ப வந்துவிட்டார். விரைவில் அவரது படத்தை வெளியிடுவேன்," என்றார்.
 

பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகும் 'வாகை சூடவா' - 'வெடி'!


இன்று வெள்ளிக்கிழமை... வழக்கமாக பண்டிகை தினங்களில்தான் விசேஷமான படங்கள் வெளியாகும்.

ஆனால் இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் வெளியாகின்றன. ஒன்று களவாணி படம் மூலம் நம்பிக்கை இயக்குநராகத் திகழும் ஏ சற்குணம் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படைப்பான வாகை சூடவா.

இந்தப் படம் முழுக்க முழுக்க 1966-ம் ஆண்டின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால், நல்ல படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வாகை சூட வா-வுக்கு காத்திருக்கிறார்கள்.

விமல், இனியா நடித்துள்ள இந்தப் படத்தில், கே பாக்யராஜ் முக்கிய வேடமேற்றுள்ளார். படம் முழுக்க 60களின் பின்னணி என்பதால் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளார் சற்குணம். தமிழ் திரையில் ஒரு யதார்த்தமான படமாக இருக்கும் என்று, இந்தப் படத்தை முன்கூட்டியே பார்த்த சக இயக்குநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த முக்கியமான படம் வெடி. விஷால் - சமீரா நடித்துள்ள ஆக்ஷன் ரொமான்டிக் படம் இது. சவுரியம் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் இது என்றாலும், படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படங்கள் இரண்டுமே ஒன்றுக் கொன்று வித்தியாசமானவை என்பதால், ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய திரைவிருந்தாக இவை அமையக்கூடும்.
 

எல் ஆர் ஈஸ்வரியுடன் டி ராஜேந்தர் பாடிய குத்துப் பாட்டு!


எல் ஆர் ஈஸ்வரி... சினிமாவில் பொன்விவா கொண்டாடும் பாடகி. 60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்.

காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான பாடல்களிலும் வெளுத்துக் கட்டிய எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.

எண்பதுகளுக்குப் பிறகு எல் ஆர் ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது. பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.

இந்த நிலையில், எல் ஆர் ஈஸ்வர் மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் அஷ்டாவதானி எனப்படும் டி ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.

'கலாசலா..' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள் இந்தப் பாடலுக்கு.

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தபாங் படத்தின் ரீமேக்தான் இந்த ஒஸ்தி. தபாங்கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..'

மல்லிகா ஷெராவத், எல் ஆர் ஈஸ்வரி, டி ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இத இத இதத்தானே 'ஒஸ்தி' டீம் எதிர்ப்பார்த்தது!
 

சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!


தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான்.

அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.

இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான்.

இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார்.

ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.
 

முப்பொழுதும் உன் கற்பனைகள் ஒற்றைப் பாடல் வெளியீடு!


இப்பொழுதெல்லாம், ஒரு படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிடுவது புதிய வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில், விண்ணை தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், அடுத்து தயாரித்து இயக்கியிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ஒற்றைப் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.

அமலா பால், அதர்வா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடலை ஜீவா வெளியிட வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்குமார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார்.

அந்த அனுபவம் பற்றிப் பேசிய தாமரை, "பொதுவாக என்னை காதல் பாடல்கள் எழுதுபவள் என்று முத்திரை குத்திவிட்டார்கள். எனக்கும் தத்துவ, சோக, புரட்சி, தாலாட்டுப் பாடல்கள் எழுதணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள பாடல் வித்தியாசமானது. காதலிக்கு காதலன் தர நினைக்கிற பரிசைப் பற்றிய பாடல். நானும் என் காலத்தை மனதில் கொண்டு சில வரிகளை எழுத, இல்ல, இந்தக் காலத்துக்கேத்த பரிசுகளை வரிசைப் படுத்துங்க என்றார்கள். அப்படி என்னதான் இந்தக் காலத்தில் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, சிட்டி சென்டர், எஸ்கேப், ஸ்கை வாக் என்று நவீன ஷாப்பிங் மால்களுக்கு என்னை கூட்டிப் போனார்கள். அங்கே பார்த்த பிறகுதான் இன்றைய வழக்கங்களே வேறாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறேன்," என்றார்.

இசைத்தட்டை வெளியிட்ட ஜீவா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், இயக்குநர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் பேசினர்.

மிக சுருக்கமாகவும், கச்சிதமாகவும் அமைந்திருந்தது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு!
 

இளையராஜா, யுவனைப் பிரிந்தார் பாலா... அடுத்த படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ்!


ஜிவி பிரகாஷின் காட்டில் இப்போது அடை மழை... அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள், அதுவும் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த முக்கிய இயக்குநர்களின் படங்களில்.

ஏ ஆர் ரஹ்மானின் உறவுக்காரர்தான் ஜிவி பிரகாஷ். ஜென்டில்மேன் படத்தில் குழந்தைப் பாடகராக அறிமுகமானார். வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

அதைத் தொடர்ந்து பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரஜினியின் குசேலன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் வந்த படங்கள் அனைத்தும் ஜிவி பிரகாஷுக்கு பெயர் சொல்லும்படி அமைந்தன. அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், ஆடுகளம் என தொடர்ந்து ஹிட் அடித்தன இவரது படங்கள்.

இப்போது பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார்.

அடுத்ததாக, அவருக்கு அடித்துள்ளது 'பாலா பட வாய்ப்பு' எனும் பெரும் அதிர்ஷ்டம்.

அதர்வாவை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாலாவின் படங்களில் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இவரது முதல்படம் சேதுவுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரையிசையில் அந்தப் படம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்தபடம் நந்தாவுக்கு யுவன் சங்கர் ராஜாவும், பிதாமகனுக்கு இளையராஜாவும் இசையமைத்தனர். நான் கடவுளுக்கும் இளையராஜாதான் இசை.

அவன் இவனுக்கு மீண்டும் யுவன் இசையமைத்தார். இந்த நிலையில் தனது ஆறாவது படத்துக்கு இளையராஜா குடும்பத்துக்கு வெளியில் உள்ள ஒருவரை இசையமைப்பாளராக பாலா ஒப்பந்தம் செய்துள்ளது, திரையுலகில் இன்றைய பரபரப்பாக பேசப்படுகிறது.
 

போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி!


'ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்' - இந்த விருப்பமோ ஆசையோ இல்லாத பொது ரசிகனையோ ரஜினி ரசிகனையோ பார்ப்பது அரிது!

ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை ஏகத்துக்கும் உண்டு.

சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்ற பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் போட்டோ இதுதான்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், உடம்பை பழைய நிலைக்குக் கொண்டுவர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் ரஜினி. தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.

மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் தன் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் ஒரு ரவுண்ட் வருகிறாராம் அதிகாலை நேரத்தில்.

ரஜினி வருவதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள். உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுக்க, சந்தோஷத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் பழைய உடல்நிலையுடனும் இருந்ததாக இந்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ராணா மேலும் தாமதமாகும் என்று வரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

பிபாஷா பாசு, ராணா டக்குபதி விரைவில் திருமணம்?


பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்றிருக்கும் நடிகர் ராணா டக்குபதிக்கும் இடையே பத்திக்கிச்சாம். விரைவில் திருமணம் நடக்கப்போவதாக பேசப்படுகிறது.

நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். என்னாச்சோ, ஏதாச்சோ என்று தெரியவில்லை ஆளுக்கொரு பக்கமா பிய்த்துக் கொண்டு போய் விட்டனர். பிபாஷா தன்னை மணந்துகொள்ளுமாறு கேட்டதாகவும், அதற்கு ஜான் மறுப்பு தெரிவத்தனால் தான் இருவரும் பிரிந்ததாக ஒரு பேச்சு.

ஜானைப் பிரிந்த பிறகு பிபாஷா தெலுங்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகர் ராணா டக்குபதியுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார். ராணா தெலுங்கு முன்னணி நடிகர்கள் வெங்கடேஷ், நாகர்ஜூனாவின் நெருங்கிய உறவினர். ராணாவும், பிபாஷாவும் சேர்ந்து தம் மாரோ தம் என்ற படத்தில் நடித்தனர். அதில் இருந்து பிபாஷா, ராணாவுடன் சுற்றுவதாகத் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ராணா தமிழ் நடிகை ஷ்ரேயா சரணை டேட் செய்தார். அதன் பிறகு தான் பிபாஷா பக்கம் தாவி்விட்டார். ராணா, ஷ்ரேயா பிரிய பிபாஷா தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

என்னவோ போங்கப்பா!
 

அடிக்கடி இமயமலை போகும் ரகசியம்... - விஷால் பேட்டி


இயமலையைத் தெரியாதவர்கள் இல்லை என்றாலும், அங்கே போய் ஆன்மீக அமைதி பெற்று வருவதை பிரபலமாக்கிய பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குதான் உண்டு. அதன் விளைவு, இமயமலை என்றதுமே உடன் நினைவுக்கு வருபவர் ரஜினிதான்.

இதனால், வேறு எந்த நடிகர் இமயமலையைப் பற்றிப் பேசினாலும், ரஜினியின் பாதிப்பு அல்லது ரஜினியைப் போல இமயமலைக்குப் போவதாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இமயமலை நடிகர்கள் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் விஷால்.சமீபகாலமாக அடிக்கடி இமயமலைக்கு சென்று வருகிறாராம். ரஜினிகாந்தைப் போல் இவரும் ஆன்மிக பயணம் செல்வதாகவும், இமயமலையில் உள்ள குகைகளில் தங்கியிருந்து தியானம் செய்வதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உண்மையில் இவர் எதற்காக இமயமலை போகிறார்... உண்மையிலேயே விஷயமிருக்கிறதா அல்லது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா என கேள்வி எழுந்தது. அந்தக் கேள்வியை விஷாலிடமே கேட்டுவிட்டனர் நிருபர்கள்.

அவர் கூறுகையில், "இமயமலை, எனக்கு மிகவும் பிடித்த இடம். என் தந்தை ஜி.கே.ரெட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற படத்தை தயாரித்தபோது, எனக்கு 16 வயது.

அந்த படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடந்தது. அப்போதுதான் நான் முதன்முதலாக இமயமலைக்கு சென்றேன். 45 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்.

அதன்பிறகு 10 முறை நான் இமயமலைக்கு போய் வந்து விட்டேன். 'அவன் இவன்' படம் முடிந்ததும், எனக்கு முழுமையான ஓய்வு தேவைப்பட்டது. அந்த படத்தில் நான் ஒன்றரை கண் உள்ளவனாக நடித்து இருந்தேன். அதனால் என் கண்களுக்கும், மனசுக்கும் ஓய்வு தேவைப்பட்டது. உடனே இமயமலைக்கு புறப்பட்டேன். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தேன்.

இமயமலை செல்லும்போதெல்லாம் அங்குள்ள ஆனந்தா ஸ்பா என்ற இடத்தில்தான் தங்குவேன். அங்கிருந்து ரிஷிகேஷ், பத்ரிநாத், குலுமனாலி ஆகிய இடங்களுக்கு 'பைக்'கில் செல்வேன். பஸ் கூரை மீது கூட பயணித்திருக்கிறேன்.

ஆன்மீக பயணம் அல்ல...

ஆன்மிக பயணத்துக்காக நான் இமயமலை செல்வதில்லை. ஓய்வு எடுப்பதற்காகவே போகிறேன். என்னை அங்கு யாருக்கும் தெரியாது என்பதால், சுதந்திரமாக நடமாட முடிகிறது. அங்கு, கங்கா நதிக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது. ஒரே ஒரு நாள் அந்த பூஜையில் கலந்துகொண்டேன்.

லடாக்கில் மயங்கிய சமீரா

வடநாட்டில் எனக்கு பிடித்த இன்னொரு இடம், லடாக். ஆனால், அங்கு ஆக்சிஜன் குறைவு. 'வெடி' படத்துக்காக, 2 பாடல் காட்சிகளை அங்கு படமாக்கினோம். டாக்டர்கள் குழுவையும், ஆக்சிஜன் சிலிண்டரையும் கூடவே வைத்துக்கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். அப்படியிருந்தும் சமீராரெட்டி மயங்கி விழுந்து விட்டார். ஒரு நாள் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது,'' என்றார்.
 

டிசம்பர் 13-ம் தேதி ரஜினிக்கு பிரமாண்ட பிறந்த நாள் விழா... வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது!!


வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.

ரஜினிக்கும் அழைப்பு

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.

ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
 

பில்லா 2 நாயகி ஹூமா நீக்கம் - அஜீத் ஜோடி பார்வதி ஓமண குட்டன்!


அஜீத் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படமான பில்லா -2 ல் அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்துஜா குழுமத்தின் ஐஎன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனமும், சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் பில்லா 2.

சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படம், முன்பு ரஜினி நடித்து வெளியான பில்லாவின் முன் தொடர்ச்சியாகும்.

இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பார்வதி ஓமணக்குட்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் 2008-ம் ஆண்டு மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டம் வென்றவர். 2008-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு போட்டியில் இரண்டாவதாக வந்தவர். இந்தியாவின் முன்னணி மாடலாகத் திகழும் பார்வதி, மிஸ் போட்டோஜெனிக், மிஸ் பர்சனாலிட்டி உள்பட பல பட்டங்களை வென்றுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து பேசுகையில், "அஜீத்துக்கு ஜோடியாக, எடுத்த எடுப்பில் தமிழில் நடிப்பது பெருமையாக உள்ளது," என்றார்.

படம் ஆரம்பித்த போது, ஹூமா குரேஷி என்ற மாடல்தான் அஜீத் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

"ஆனால் படம் தொடங்கும் தேதியில் ஏற்பட்ட சில மாறுதல்கள் காரணமாக ஹூமாவின் தேதிகள் கிடைப்பது கடினமாகிவிட்டது. வேறு வழியில்லாத நிலையில், பார்வதியை தேர்வு செய்தோம். ஆனால், இந்தப் படத்துக்காக நடந்த ஆடிஷனில் அனைவரையும் கவர்ந்துவிட்டார் பார்வதி," என்று ஐஎன் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துள்ளது.

பிரேசில் மாடல் புருனா அப்துல்லா...

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் பிரேசில் நாட்டின் பிரபல மாடல் புருனா அப்துல்லா நடிக்கிறார் என்பதை ஏற்கெனவே நாம் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது அதனை ஐஎன் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
 

வெளிநாடு 'பறக்கும்' சோனா!!


தன்னை எஸ்பிபி சரண் பாலியல் வன்முறை செய்ய முயன்றார் என்று புகார் கொடுத்து, தொடர்ந்து போராட்டம் என்றெல்லாம் புயல் கிளப்பிய நடிகை சோனா, இன்று ‘விட்டால் போதுமென’ வெளிநாடு பறக்கிறார்.

எஸ்பிபி சரண் என்னிடம் பகிரங்கமாக, அதுவும் மீடியா முன்பாக வந்து மன்னிப்பு கேட்டால்தான் வழக்கு வாபஸ் என்று கூறிவந்த சோனா, நேற்று வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆனால், போலீஸார் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக உள்ளனர், அவர்களின் ‘ட்ரீட்மென்ட்’ போன்றவை புரிந்ததும், தானாகவே அமைதியாகிவிட்ட சோனா, இன்று இந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டார். சரணை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்ட சரண், இதுவரை எதுவுமே பேசவில்லை. அவர் சார்பாக பேச வேண்டியதையெல்லாம் ‘மேலிட அறிவுறுத்தலின் படி’ போலீசாரே ‘பேசிவிட்டதாக’ விவரமறிந்த வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், சரணை மன்னித்ததாக அறிவித்த கையோடு, வெளிநாடு பறந்துவிட்டார் சோனா. போவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய சோனா, மனசே சரியில்ல. எதையும் வெளிப்படையா பேச முடியாத நிலை. நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன். கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில் இருந்து மனசை தேத்திக்கிட்ட பிறகு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன்,” என்றார் சோகமாக.

அத்தனை பலமாக இருந்திருக்கிறது ‘மேலிடத்து அட்வைஸ்’!

 

உள்ளாட்சித் தேர்தல்... பிரச்சாரத்துக்குப் போவாரா வடிவேலு?


கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.

விஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே,” என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன் மரணம்


சென்னை: பழம்பெரும் நடிகர்-இயக்குநர் எஸ்.ஏ.கண்ணன், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

சக்தி நாடக சபா மற்றும் சிவாஜி நாடக மன்றத்தில் பணிபுரிந்தவர், எஸ்.ஏ.கண்ணன். பராசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்,’ ‘வியட்நாம் வீடு’ ஆகிய நாடகங்களை இயக்கியுள்ளார். சத்யம், தனிக்குடித்தனம், கீதா ஒரு செண்பகப்பூ ஆகிய படங்களை டைரக்டும் செய்தார்.

இவருடைய மனைவி காமாட்சி ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். எஸ்.ஏ.கண்ணன் தனது மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தூக்கத்திலேயே மரணம் அடைந்தார்.

மரணம் அடைந்த எஸ்.ஏ.கண்ணனின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்களம். அவருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் இருக்கிறார்கள்.

அவருடைய உடல் தகனம் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது.

 

அமெரிக்க சிகிச்சை முடிந்து மும்பை திரும்பினார் சல்மான்!


மும்பை: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் சல்மான்கான், மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரகான சல்மான்கான் (வயது 45) ‘டிரைகெமினல் நியூரால்ஜியா’ என்ற நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் முகத்தில் கன்னம், தாடைப்பகுதியில் தாங்க முடியாத வலியை அனுபவித்து வந்த அவர் அதிலிருந்து நிவாரணம் பெற அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.

அங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 31-ந் தேதியன்று அவருக்கு 8 மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குணம் அடைந்தார்.

பிக்பாஸ் சீஸன் 5-ல் பங்கேற்பு

நேற்று முன்தினம் இரவில் அவர் விமானம் மூலம் மும்பை திரும்பினார். அவரை குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற ‘பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ’வின் 5-வது சீசன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) மும்பை மெகபூப் ஸ்டூடியோவில் நடக்கிறது. ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி இந்த நிகழ்ச்சியில் சஞ்சய் தத்துடன் சல்மான்கான் கலந்துகொள்கிறார்.

 

சூர்யா மாதிரி வருமா? அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா புகழாரம்


தெலுங்கு 7-ம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழாவில் டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அல்ல அர்ஜுன், சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா ஆகியோர் சூர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 7-ம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் முருகதாஸ், கார்த்தி சிவகுமார், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அல்லு அர்ஜுன் கூறியதாவது,

சூர்யா ஒரு அருமையான நடிகர். அவரால் தென்னிந்திய திரையுலகிற்கே பெருமை. சூர்யா நடித்த கஜினி தமிழிலும், தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து தான் பாலிவுட் தெலுங்கு, தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்தது. இந்தி கஜினியில் ஆமீர் கான் நடித்திருந்தார். அங்கும் சூப்பர்ஹிட் தான் என்றார்.

ராம் சரண் தேஜா கூறுகையில், சூர்யாவால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். எனக்கு மகதீரா மூலம் தான் அங்கீகாரம் கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஈஸியாக நடித்துவிடுவார். சொல்லப் போனால் இன்னும் சிறப்பாக நடிப்பார் என்றார்.

அவர்களைப் போன்று பிரபல இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் வி.வி. விநாயக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சூர்யாவை ஆஹா, ஓஹோ என்று புகழந்து பேசினர்.

இப்படி ஆள் ஆளுக்கு புகழந்து தள்ளி சூர்யாவை வெட்கப்பட வைத்துவிட்டனர்.
 

தீபாவளிக்கு ஒரு நாள் முன் வெளியாகும் விஜய்யின் வேலாயுதம்!


விஜய் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கியுள்ள வேலாயுதம் படம் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, அய்ங்கரன் நிறுவனம் வெளிநாடுகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

வெளிநாடுகளில் மட்டும் 400 திரையரங்குகள் வரை இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. இந்த தியேட்டர்கள் விவரங்களையும் அய்ங்கரன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.

ரஜினியின் எந்திரனைப் போல பெரிய ஓபனிங் வேண்டும் என்பதற்காக தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். அதேபோல தமிழகத்தில் 1000 அரங்குகள் வரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
 

டெலிகாம் விளம்பரத்திற்கு விஜய்க்கு ரூ. 5 கோடி?


நடிகர் விஜய் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

கோலிவுட் நட்சத்திரங்கள் தற்போது அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர். ஏர்செல் நிறுவனத்திற்கு சூர்யாவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரது தம்பி கார்த்தியும் பிராண்டு அமாபசிடர்களாக உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேரவிருக்கிறார். அவர் ஒரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 5 கோடி.

தற்போது வேலாயுதம் பட வேலை முடிந்துவிட்டது. நண்பன் முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விஜய் 3 நாட்கள் நடக்கும் இந்த புதிய விளம்பரப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
 

நடிகை ஸ்ருதிக்கு சிறந்த இசை ஞானம் உள்ளது: ஹாரிஸ் ஜெயராஜ்-சூர்யாவும் புகழாரம்


சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இசை ஞானத்தை போல, அவரது மகள் ஸ்ருதிஹாசனுக்கும் உள்ளது என இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் கூறியதாவது, ஏழாம் அறிவு படத்தில் 6ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட ஒரு பாடல் வருகிறது. இதற்காக பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை வாங்க பல இடங்களில் தேடினேன்.

கடைசியில் சீனாவில் நடந்த ஒரு ஏலத்தில் பல பணக்காரர்களுடன் போட்டி போட்டு அந்த இசைக் கருவிகளை வாங்கினேன். அவற்றை பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு இசை அமைத்துள்ளேன்.

இந்த படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'உன்னைப்போல் ஒருவன்' பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு இசை ஞானம் மட்டுமின்றி, சிறந்த குரல்வளமும் உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இசை ஞானம் கொண்டவர்.

அவரது ஞானம், ஸ்ருதிக்கு இயற்கையாகவே வந்துள்ளது. அவர் படங்களில் நடிப்பதோடு நின்றுவிடாமல், இசையமைப்பது, பாடுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும், என்றார்.

தமிழ் சினிமாவில் ஸ்ருதிக்கு முக்கிய இடம்

இதேபோல நடிகர் சூர்யாவும் ஸ்ருதியின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார்.இதுகுறித்து சூர்யா கூறுகையில், ஸ்ருதியுடன் நடிக்க நான் பயந்தேன். கமல்ஹாசனின் மகளுடன் எப்படி நடிப்பது என்ற பயம்தான் அது. ஆனால் அவருடன் நடித்தபோதுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உள்ளதைப் புரிந்து கொண்டேன் என்றார் சூர்யா.
 

250 இதய நோயாளிகளுக்கு உதவும் மம்மூட்டி!


மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு பெரிய மனசு. அவர் ஏற்கனவே 100 இதய நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் 250 பேருக்கு உதவ முன்வந்துள்ளார்.

மாலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடுகெட்டிப் பறக்கும் நடிகர் மம்மூட்டி (58). அவர் திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார்.

சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டும் மம்மூட்டி நாளை அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்.

இதய அறுவை சிகிச்சை தவிர மம்மூட்டி தனது ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண்புரை அகற்றும் சிகிச்சை செய்யவும் உதவி வருகிறார்.
 

புதுமுகங்களுக்கு வாய்ப்பு... உதயநிதியின் புது முடிவு!


கருணாநிதி குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில், குறைந்த காலத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்தவர் உதயநிதி ஸ்டாலின்.

ஒரு பெரிய அரசியல் தலைவரின் வாரிசு என்ற நினைப்பை ஓரங்கட்டிவிட்டு, இவர் சினிமாவில் செய்துவரும் பணிகள் இவரை தனித்து அடையாளம் காட்டுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகஜமாக பழக வைக்கிறது.

இப்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார் உதயநிதி. இனி பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, சின்ன பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து தயாராகும் படங்களுக்கும் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளாராம் உதயநிதி.

சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவுக்குப் பிறகு இவரது அடுத்த தயாரிப்பு, 'தென்மேற்கு பருவக்காற்று' படம் தந்த சீனு ராமசாமியின் அடுத்த படம்தானாம்.

சீனு ராமசாமி கூறிய கதைகளில் ஒன்றை படமாக எடுக்க சம்மதித்துள்ள உதயநிதி, அதில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
 

சரணை மன்னிச்சிட்டேன்! - சோனா


தன்னிடம் கடிதம் மூலம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துவிட்டார் சரண் என்றும் இதனால் அவரை மன்னித்துவிட்டதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

மங்காத்தா மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்பிபி சரண் மீது புகார் தெரிவித்தார் சோனா. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எஸ்பிபி சரணுக்கு இருவார கால முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. சோனாவை சமாதானப்படுத்த எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோரும் நேரில் போய் பேசினர்.

சரண் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்டுவிட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக முன்பு சோனா கூறினார். ஆனால் சோனாவிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, சோனாதான் பாலியல் உணர்வை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார் என்று கூறினார்.

இந்த நிலையில் கடிதம் மூலம் சரண் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவரை மன்னித்துவிட்டேன் என்று தற்போது சோனா அறிவித்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து எஸ்பிபி சரண் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை.

இதன் மூலம் சோனா-சரண் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
 

விஜய்க்காக ஒரு கதை...! - 'வெடி' கொளுத்தும் விஷால்


ஒரு நடிகராகும் முனைப்பில் திரையுலகில் நுழைந்தவரல்ல விஷால். இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நடிகரும் இயக்குநருமான அர்ஜுன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகத்தான் அவரது சினிமா வாழ்க்கை ஆரம்பமானது.

சட்டென்று 'செல்லமே'யில் நடிகராகி, மளமளவென முன்னேறி இன்று முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக நிற்கிறார்.

பிரபு தேவா இயக்கத்தில் இவரும் சமீராவும் ஜோடி சேர்ந்திருக்கும் 'வெடி' வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

வெடியின் ஸ்பெஷல் என்ன?

"இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்ற சவுரியம் படத்தின் ரீமேக். ஆனால் அதை விட மிக அழகாக படத்தை மெருகேற்றியுள்ளார் பிரபு தேவா மாஸ்டர்.

பொதுவா தெலுங்கில் எந்தப் படம் ஜெயித்தாலும் உடனே அதை தமிழில் நாம பண்ணனும் என்பதுதான் என் ஆசை. ஆனா எல்லா படத்தையும் பண்ண முடியாது. என்னைத் தவிர யார் பண்ணாலும் அதை தாங்கவும் முடியாது. அப்படி நான் மிஸ் பண்ண படம் சந்தோஷ் சுப்ரமணியம்.

தெலுங்கில் சவுரியம் ரிலீஸ் ஆனதும் நாங்க அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கிட்டோம். அப்போதே தீர்மானிச்ச ஒரு விஷயம், படத்தின் இயக்குநர் பிரபுதேவா மாஸ்டர்தான் என்பது.

இந்தப் படத்துக்கே புதிய கலர், ஃபீலைக் கொடுத்துள்ளார் பிரபுதேவா. அவன் இவன் படத்தில் என் நடிப்பை எல்லோரும் புகழ்ந்தார்கள். இந்தப் படத்தில் அந்தப் பெயரை காப்பாத்திக்குவேன்னு நினைக்கிறேன்," என்றார்.

தீபாவளிக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் படத்தை வெளியிடுகிறார்கள். காரணம் கேட்டால், "இப்போல்லாம் எந்தப் படமாக இருந்தாலும் இரண்டு வாரங்கள்தான் கலெக்ஷன். தசரா, காலாண்டு லீவ் என நல்ல டைம் இது. அதனால்தான் தீபாவளிக்கு வெளியிடாமல் இப்போதே ரிலாஸ் செய்கிறோம்," என பக்காவாக பிஸினஸ் பேசினார் விஷால்.

அடுத்தடுத்து பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்களின் படங்கள் என விஷால் பிஸியாக இருந்தாலும், உள்ளுக்குள் அந்த இயக்குநர் ஆசை அப்படியே இருக்கிறதாம்.

எப்போது இயக்குநராகும் ஐடியா?

"விஜய்க்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். ரொம்ப நாளா அவருக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதை அது. அவர் சம்மதிச்சா இயக்க நான் இப்போதே ரெடி" என்றார் விஷால்.

விஜய் ரெடியா?
 

சன் குழுமத்திலிருந்து விலகினார் சக்சேனா!!


சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.

சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.

ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.

கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா.

இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.

சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.

ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.
 

'மேண்டலின்' சீனிவாசுக்கு விவாகரத்து: மனைவிக்கு ரூ10 லட்சம் ஜீவனாம்சம்!


சென்னை: மேண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸ், தனது மனைவியிடம் பெற்ற விவாகரத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் ஜீவனாம்சமாக மனைவிக்கு ரூ 10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

மேண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸ். இவருக்கும், ஸ்ரீ என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே சென்னை குடும்பநல கோர்ட்டில் மேண்டலின் சீனிவாஸ் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'மனைவி தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், ஆந்திராவில் விஜிலன்ஸ் கமிஷனராக இருக்கும் அவரது தந்தையும் தன்னை மிரட்டுவதாகவும் அதில் சீனிவாஸ் கூறியிருந்தார்.

எனவே இந்த காரணங்களுக்காக தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வழக்கில் சீனிவாஸ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை குடும்பநல கோர்ட்டு, சீனிவாஸ்- ஸ்ரீ தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ மேல்முறையீட்டு மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், "கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை குழியில் போட்டு மூடிவிட்டு, சீனிவாசும், ஸ்ரீயும் அடுத்ததாக புதுவாழ்க்கையை தொடங்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொருவரையும் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காலகட்டத்தில் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நடத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீண்டும் கணவன், மனைவியாக இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் பிரச்சினையின் முடிவுக்கு, விவாகரத்து மட்டும்தான் ஒரே நிவாரணமாக இருக்கும்.

குடும்பநல நீதிமன்ற உத்தரவின்படி, மனைவிக்கும், மகனுக்கும் ஜீவனாம்சமாக தலா ரூ.5 லட்சம் தொகையை சீனிவாஸ் கொடுத்துள்ளார். இந்த ஜீவனாம்ச தொகை மேலும் ரூ.5 லட்சம் அதிகரிக்கப்படுகிறது. அந்தத் தொகையை ஒரு மாதத்துக்குள் சீனிவாஸ் வழங்க வேண்டும்," என்று கூறினர்.
 

எதிர்ப்பை மீறி வெளியாகும் 'சத்யானந்தா'


போலிச்சாமியார்கள் பற்றிய திரைப்படம் ஒன்று சத்யானந்தா என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த எதிர்ப்பையும் மீறி இந்தப் படத்தை திரையிடுகிறார்கள்.

படத்தின் டப்பிங், ரீ ரிக்கார்டிங் போன்ற பணிகள் முடிந்துள்ளது. தற்போது தணிக்கை குழுவுக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சத்யானந்தா படத்தை ரிலீஸ் செய்வதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்துக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், அத்துடன் ரூ. 3 கோடி கேட்டு தனியாக மானநஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கு படக்குழு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மதன்படேல் கூறுகையில், "சத்யானந்தா படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தணிக்கை குழுவுக்கும் அனுப்பி விட்டோம். தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். நித்யானந்தா இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பது வியப்பாக உள்ளது. படத்தை பார்க்காமலே அவர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை. உலகம் முழுவதும் போலி சாமியார்கள் உள்ளனர். அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதே இப்படத்தின் நோக்கம்.

இந்த படம் ஒரு கற்பனை கதை. ஆன்மீகவாதிகள் போர்வையில் உள்ள போலிகளிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற சமூக அக்கறை யோடு இப்படத்தை எடுத்துள்ளோம். நித்யானந்தா ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளார். பணத்தை கொடுத்தால் ரிலீசுக்கு சம்மதிப்பாரா?," என்றார்.

இப்படத்தில் சத்யானந்தாவாக ரவி சேட்டன் நடித்துள்ளார். இத்தாலி நடிகை அனுகி, நேகா மிஸ்ரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
 

பிரபல தயாரிப்பாளரை சந்திக்க மறுத்ததால் மலையாளத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு தடை!


பிரபல மலையாளத் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பை நேரில் சந்தித்துப் பேச மறுத்ததால் முன்னணி நடிகை நித்யா மேனனுக்கு மலையாளத்தில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் நித்யா மேனன். தமிழில் 180, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கேரள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் மம்முட்டியின் நண்பருமான ஆண்டோ ஜோசப் ஒரு படத்தில் நித்யா மேனனை ஒப்பந்தம் செய்ய விரும்பினார்.

எனவே நித்யா நடித்துக் கொண்டிருந்த மலையாள பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நித்யா மேனனை சந்தித்துப் பேச விரும்பினார் ஆண்டோ ஜோசப். இந்த தகவல் நித்யாமேனனிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆண்டோ ஜோசப்பை சந்திக்க நித்யாமேனன் மறுத்து விட்டார். எதுவாக இருந்தாலும் எனது மானேஜரிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆண்டோ ஜோசப் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.

மூத்த தயாரிப்பாளரை அவமதித்ததாக நித்யா மேனனுக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், பிறப்பித்துள்ளார்.

இதேபோல தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்குமாறு அந்தந்த மாநில தயாரிப்பாளர் சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
 

மீண்டும் ஒன்றுசேரும் சல்மான், கத்ரீனா?


நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்குள் மீண்டும் காதல் உணர்வு துளிர்விட்டுள்ளது என்று பேசப்படுகிறது.

யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் சல்மான் கானும், கத்ரீனா கைபும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் மிக நெருக்கமாக உள்ளனராம்.

சல்மானுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தான் நரம்புக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பில் கத்ரீனா சல்மானை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறாராம்.

கத்ரீனா கைப் படப்பிடிப்பில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததும் அவரை தூக்கிவிட முதலில் வந்தது சல்மான் தான். அது மட்டுமின்றி கத்ரீனா மினி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு சைக்கிளில் ஏறும்போது அவரது உள்ளாடை தெரியவே அதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவரை மறைத்துக் கொள்ள சல்மான் ஓடினார். ஆனால் அதற்குள் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்துவிட்டனர்.

போகிற போக்கை பார்த்தால் இருவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் போலும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 

'கடிதம் மூலம் வருத்தம்'... சரணுடன் நடிகை சோனா 'சமரசம்'!


சென்னை: எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்ததால் அவருடன் நான் சமரசம் செய்து கொண்டேன் என்று நடிகை சோனா கூறினார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்துக்கு நடிகை சோனா சென்றபோது அவரிடம் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்றதாக புகார் செய்தார்.

சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார் என்று சோனா கூறியிருந்தார்.

அத்துடன் எஸ்.பி.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசிலும் புகார் செய்தார்.

இந்த புகார் தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக எஸ்.பி.பி.சரண் கோர்ட்டில் முன்ஜாமீனுக்கு மனு செய்தார்.

மேலும் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, போலீஸ் மூலம் சோனாவை மிரட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சோனா-எஸ்.பி.பி.சரண் விவகாரம் நேற்று முடிவுக்கு வந்தது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன் என்று சோனா கூறினார்.

ஆனால் இதுபற்றி சரண் வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்ப்பந்தம்?

சோனா தன் வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம், அவருக்கு திரையுலக மற்றும் அரசியல் புள்ளிகளிடமிருந்து வந்த நெருக்கடிகள்தான் என்று கூறப்படுகிறது.

சரணுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யாமல் சோனா அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம் என போலீசாரே சோனாவை மிரட்டியது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, திரையுலக முக்கிய பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக சோனா இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டாராம்.
 

உலகமே கொண்டாடும் தமிழனை உள்ளூரில் யாருக்கும் தெரியவில்லையே! - ஏ ஆர் முருகதாஸ் வேதனை


உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

சூர்யா

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பெயரை மாற்றிய கௌதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பெயரை மாற்றிய கௌதம்!

9/27/2011 10:49:07 AM

பொதுவாக தன்னுடைய படங்களுக்கு கவிதை நடையில் தலைப்பு வைக்கும் கௌதம், இந்தியில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பெயரை மாற்றியுள்ளார். முதலில் ப்ரேம் கதா என்று பெயர் வைத்திருந்த கௌதம் அது கவிதை நடையில் இல்லை என்று கூறி படத்தின் பெயரை ‘ஏக் தீவானா தா’ என்று மாற்றியுள்ளார். இது ‌ரிஷி கபூ‌ரின் பழைய படமொன்றின் பாப்புலர் பாடலின் வ‌ரி. கௌதம் இப்போ ஹேப்பி. முன்னதாக தன்னுடைய தமிழ் படங்களுக்கும் தமிழ் பாடல் வரிகளே பெயர்களாக வைத்து வருகிறார். உதாரணமாக விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம்… எல்லாமே பாடல்களின் முதல் வ‌ரி. ஆனால் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு மட்டும் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ என பெயர் வைத்துள்ளார்.

 

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாளப் படம்!

9/27/2011 10:39:44 AM

ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு படங்கள் அனுப்பி வைக்கப்படும். சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பி‌ரிவுக்காகதான் இந்த‌ப் படங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு மலையாளப் படமான ஆதாமின்டெ மகன் அபு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பி‌ரிவுக்கான ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்தது.

 

கோடிக்கு உயர்ந்த ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோடிக்கு உயர்ந்த ஜீவா!

9/27/2011 11:31:06 AM

இது ‌‌ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்த ரௌத்திரம், வந்தான் வென்றான் படங்களும் ஓரளவிற்கு ஓடின, இதுமட்டுமின்றி நண்பன், நீதானே என் பொன்வசந்தம் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு‌ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார். இதனால் ஜீவா, அவரது சம்பளத்தை கோடிக்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது ஜீவா தான் சொல்ல வேண்டும்.




 

‘காதலில் சொதப்புவது எப்படி?’

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'காதலில் சொதப்புவது எப்படி?'

9/27/2011 3:32:31 PM

'காதலில் சொதப்புவது எப்படி?' - இப்படி ஒரு படத்திற்கு தலைப்பு வைத்தால் எப்படி இருக்கும்? பாலாஜி என்ற புதியவர்தான் 'காதலில் சொதப்புவது எப்படி?' படத்தை இயக்கப் போகிறார். இவர் இந்தக் கதையை ஒரு குறும்படமாக எடுத்திருந்தாராம். ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் பார் வைக்கு இந்த படம் போயிருக் கிறது. பார்த்தவர் மிகவும் வியந்து போயிருக்கிறார். யதார்த்தமாக தனது நண்ப ரான சித்தார்த்திடம் இந்தப் படம் குறித்து நீரவ்ஷா சொல்லப்போக, அவரும், "உடனே நீங்க சொல் லும் அப்படத்தைப் பார்க்கணும்" என்று விருப்பம் தெரிவித்தாராம். நீரவ்ஷா போலவே சித்தார்த் மனதையும் கொள்ளை கொண்டு விட்டது பாலாஜியின் குறும்படம். "இதில் நானே நடிக்கிறேன். ஆக வேண்டியதை பாருங்கள்" என்று பாலாஜியை அழைத்து சொல்லிவிட்டார் சித்தார்த். கையோடு பாலாஜி கேட்டுக் கொண்டபடியே இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த மார்ச் மாதம் வரை அறுபது நாட் கள் கால்ஷீட்டையும் ஒதுக்கித் தந்திருக்கிறாராம். காதலுக்காக இன்றைய இளம் தலைமுறையினர் எப்படியெல்லாம் மெனக்கெடுகிறார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் எப் படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை நகைச்சுவையாக சொல் லப் போகிறதாம் இப்படம்.




 

தீபாவளிக்கு முன்னதாக வரும் வேலாயுதம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீபாவளிக்கு முன்னதாக வரும் வேலாயுதம்!

9/27/2011 12:09:43 PM

இளைய தளபதி விஜய் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்த படம் வேலாயுதம் தீபாவளிக்கு திரைக்கு வரதாக இருந்தது. ஆனால் படத்தை தீபாவளிக்கு முன்பே திரைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார். ஜெனிலியா, ஹன்சிகா என விஜய்க்கு இரு ஜோடிகள். பழைய தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக் என்று கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 26 தீபாவளி அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 25ஆம் தேதியே திரைக்கு வருகிறது.

 

சரவணன் இயக்கத்தில் ஆர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சரவணன் இயக்கத்தில் ஆர்யா!

9/27/2011 2:30:15 PM

ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, நல்ல வசூலையும் பெற்று தந்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி 'எங்கேயும் எப்போதும்' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் தன்னுடைய தயாரிப்பில், ஒரு படம் செய்து தருமாறு சரவணிடம் லிங்குசாமி கேட்டதாக தெரிகிறது. தற்போது லிங்குசாமி ஆர்யா மற்றும் மாதவன் நடிக்கும் 'வேட்டை' படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சரவணன் ஆர்யாவிடம் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆர்யாவுக்கும் கதை பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். அதே சமயம் வேட்டை முடிந்த பிறகு வசந்த பாலன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கிறாராம். ஆனால் வசந்த பாலனின் அரவான் படம் ஷூட்டிங் இன்னும் முடியாததால், சரவணன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க கூடும் என தெரிகிறது.




 

அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அ‌‌ஜீத் படத்துக்கு வந்த திடீர் குழப்பம்!

9/27/2011 12:10:29 PM

மாங்காத்தா வெற்றி பிறகு தல அஜீத் தற்போது பில்லா 2-வில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ,எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து படத்தை இயக்க போவது ஜெயம் ராஜா என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த தூக்குடு படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்றும் ஒரு தரப்பு தெரிவித்தது. அதே சமயம், நண்பன் படத்தை முடித்த கையோடு, ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் ஷங்கர் கூறியிருந்தாகவும் அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும் என இன்னொரு தரப்பு தெரிவித்து வருகிறது. இந்த குழப்பமான நிலை நிலவி வந்த நிலையில், ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன்(ஜெயம் ராஜா) இயக்கத்தில் அஜீத் நடிக்கிறார் என்ற செய்தி பொய்யானது என்று தனது ட்விட்ட‌ரில் தெ‌ரிவித்துள்ளார். இயக்குனர் யார் என்பதை அ‌‌ஜீத்தோ, ரத்னமோ இன்னும் முடிவு செய்யவில்லை, இதுவே உண்மை என்கிறார்கள்.




 

ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3 இறுதிபோட்டியில் சாய்சரண் வெற்றி

9/27/2011 12:40:30 PM

விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்த ஏர்டெல் சூப்பர் சிங்கர்-3-யின் மாபெரும் இறுதிபோட்டியில், வெற்றியாளராக சாய் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இரண்டு வாரங்களாக நடந்த இறுதிச் சுற்றில் அதிக வாக்குகளின் அடிப்படையில் நான்கு போட்டியாளர்கள் சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரண், சந்தோஷ் ஆகியோர் பிரம்மாண்ட மேடையில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் பாடும் அரிய வாய்ப்பை பெற்றனர்.  இந்த நான்கு போட்டியாளர்கள் தங்களது திறமையை நேயர்கள் முன் நிரூபித்து வாக்குகளை பெற்றனர். இந்த இறுதிப்போட்டி விஜய் டிவியால் நேயர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு அதனை நேரடியாகவும் ஒளிபரப்பும் செய்தது. வர்களின் வெற்றி, பார்வையாளர்களின் வாக்குகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னை டிரேடு செண்டர், நந்தம்பக்கத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த போட்டியாளர்கள் பாட, விறுவிறுப்பாக நடந்த வாக்களிப்பில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3-ன் வெற்றியாளராக சாய்சரண் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான அபார்ட்மென்ட் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.  2வது வெற்றியாளராக சந்தோஷ்க்கு டாடா விஸ்டா காரும், 3வது வெற்றியாளரான சத்யபிரகாஷ்க்கு ரூ.3 லட்சமும், 4வது வெற்றியாளரான பூஜாவுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ், இசை மேதை எம்.எஸ். விஸ்வனாதன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் செல்வராகவன், பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், மால்குடி சுபா மற்றும் ஏராளமான பிரபல பாடகர்கள் கலந்துகொண்டனர்.




 

ஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷங்கர் போல் விறுவிறுப்பாக இயக்குகிறார் சுசீந்திரன் : விக்ரம்!

9/27/2011 3:18:08 PM

ராஜபாட்டை படம் பற்றி விக்ரம் கூறியது: இதில் ஜிம் பாயாக வரும் நான் சினிமாவில் வில்லன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பேன். ஆக்ஷன், கூத்து, லூட்டி என எல்லாம் கலந்த கதை. 'தெய்வத் திருமகள்' படத்துக்கு பிறகு 'தூள்', 'சாமி' பாணியிலான ஆக்ஷன் படத்தில் நடிக்க ஆசையாக இருந்தது. அதற்கு ஏற்ற ஸ்கிரிப்ட்டாக 'ராஜபாட்டை' அமைந்திருக்கிறது. என்னை பல்வேறு கெட்டப் பில் இதில் காட்டி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர்சாமியின் குதிரைÕ என யதார்த்தமான படங்களை தந்தவர், இப்படியொரு ஆக்ஷன் ஸ்கிரிப்ட் சொல்லி அசத்தினார். தரணி, ஷங்கர் போல் இப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார். எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் கமர்சியல் படம். மேம்போக்காக சொல்லாமல் நல்ல மெசேஜும் இதில் இருக்கிறது. இதே டீமுனுடன் மற்றொரு படம் செய்ய உள்ளேன். விஜய் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் முடிந்தபிறகு அப்படத்தில் நடிப்பேன்.




 

கிசு கிசு - காஸ்டியூம் பிசினசில் நடிகை பிசி!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
காஸ்டியூம் பிசினசில் நடிகை பிசி!

9/27/2011 3:24:29 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இலி ஹீரோயின் காஸ்டியூம் பிசினஸ்ல ஆர்வம் காட்டுறாராம்... காட்டுறாராம்... சொந்த ஊர்ல டிரஸ் டிசைன் கம்பெனி தொடங்கினவரு, தன் சம்பாத்தியத்தை பெரிய அளவுல இன்வெஸ்ட் பண்றாராம்... பண்றாராம்... ஊர் பக்கம் ஷூட்டிங் இருந்தா, அது முடிஞ்ச கையோடு கம்பெனிக்கு போய் வரவு செலவு கணக்கை  உன்னிப்பா கவனிக்கிறாராம். பிசினஸை கவனிக்க ஆட்களை நியமிச்சிருந்தாலும் அவங்களை கண்காணிக்க தன்னோட அம்மாவை ஹெட்டா போட்டிருக்காராம்... போட்டிருக்காராம்...

சென்டிமென்ட் படங்களை இயக்குன சேர இயக்கம், குடும்ப கதையை யாரும் விரும்ப மாட்டேங்க¤றாங்கன்னு சொல்றாராம். Ôஜாலியா படத்த பாக்கணும்னு விரும்புறதால என்னோட பாலிசியை மாத்திக்கிட்டேன். இனிமே இயக்குறதா இருந்தாலும் நடிக்க¤றதா இருந்தாலும் அது சென்டிமென்ட்டை புழியற படமா இருக்காது. கமர்சியலான கதையாத்தான் இருக்கும்Õனு பாக்குற வினியோகஸ்தருங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

இந்தியில தயாராகுற சில்க் கதை படத்துல சவுத் இண்டஸ்ட்ரியை கிண்டல் அடிச்சிருக்காங்களாம்... அடிச்சிருக்காங்களாம்... இது பற்றி பட யூனிட்லேருந்து தகவல் கசிய ஆரம்பிச்சிருக்காம். இதனால சம்பந்தப்பட்டவங்க கோபத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்... பட ரிலீஸ் நேரத்துல பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...




 

18 வயதுக்கு பிறகுதான் மகள் என்ட்ரி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
18 வயதுக்கு பிறகுதான் மகள் என்ட்ரி

9/27/2011 3:22:14 PM

'படத்துக்கு படம் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றனர். விரைவில் பிரபு மகன் விக்ரம் 'கும்கி' படத்தில் அறிமுகமாகிறார். மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக் மகன் கவுதம் நடிக்க பேச்சு நடக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கியவர் ஸ்ரீதேவி. அவரது மகள் ஜானவி தெலுங்கு படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாக நடிப்பார் என்று தகவல் பரவியது. இதைக்கேட்டு கோபம் அடைந்த ஸ்ரீதேவி, எந்த துறையில் ஈடுபடுவது என்பது பற்றி இன்னும் ஜானவி முடிவு செய்யவில்லை. இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு பிறகுதான் அவளிடம் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்றே கேட்பேன்ÕÕ என்றார். மீடியாதான் என் மகள் நடிக்கிறாள் என்று கிளப்பிவிட்டிருக்கின்றன. நடிப்பாரா? இல்லையா? என்பதை சொல்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்படி நடிப்பதென்றால் அவரை பாலிவுட்டிலேயே என்னால் அறிமுகப்படுத்த முடியும். அதைவிட்டு ஏன் தெலுங்கு படத்தில் அறிமுகம¢ செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.




 

அடுத்த மாதம் சதுரங்கம் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அடுத்த மாதம் சதுரங்கம் ரிலீஸ்

9/26/2011 10:45:48 AM

கரு.பழனியப்பன் இயக்கிய படம், 'சதுரங்கம்'. ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜிடம் கேட்டபோது, ''நல்ல கதையம்சம் கொண்ட இந்தப் படம் அரசாலும் திரையுலக பிரமுகர்களாலும் பாராட்டப்பட்டது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக வெளியிடமுடியாமல் இருந்தது. தற்போது பிரச்னை தீர்க்கப்பட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்து வருகிறேன். அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது'' என்றார்.




 

பக்கா அரசியல் விளையாட்டாகும் சோனா - எஸ்பிபி மகன் விவகாரம்!


நடிகை சோனா கொடுத்த பாலியல் பலாத்கார புகார் விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

மங்காத்தா பார்ட்டியில் பங்கேற்றதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் பார்த்தவர்களில் ஒருவரான, பெயர் சொல்ல விரும்பாத, ஒரு நடிகர் நம்மிடம் இப்படிச் சொன்னார்:

"எஸ்பிபி சரண் மீது புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அவரை கைது செய்யவில்லை போலீசார். குறைந்தபட்சம், கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லை. மாறாக அவர் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள போதிய அவகாசம் அளித்தனர்.

திமுகவினர் படாதபாடு பட்டாலும் கிடைக்காத முன்ஜாமீன், எஸ்பிபி மகன் கேட்டவுடன் கிடைத்துவிட்டது. அதுவும் பாலியல் பலாத்கார வழக்கில். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக எஸ்பி பாலசுப்ரமணியன் வீட்டு முன் போராட்டம் நடத்தப் போவதாக சோனாவும் சில மகளிர் அமைப்புகளும் அறிவித்தன.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி தராத போலீசார், எஸ்பிபி வீட்டுக்கு எக்கச்சக்க போலீஸ் பாதுகாப்பு போட்டனர். சோனாவை நேரடியாக அழைத்து, போராட்டம் நடத்தினால் உள்ளே தூக்கி போடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இது என்ன வகை நியாயம்... இதுதான் போலீஸார் சட்டத்தைக் காப்பாற்றும் லட்சணமா...

புகார் கொடுத்தவர் எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? அவர் கொடுத்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என்றுதானே பார்க்க வேண்டும்?" என்று ஆதங்கப்பட்டார்.

இந்த நிலையில், சோனா வழக்கை அரசியல் காமெடியாக மாற்ற வெளிப்படையாகவே முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் அருள்துமிலன் என்ற வழக்கறிஞர், ஆண்கள் மீது பொய்யான புகார்கள் தரும் நடிகைகள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

போராட்டம் நடத்தக்கூடாது என சோனாவை எச்சரித்த போலீஸ், இந்த நபரை மட்டும் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்? எந்த தைரியத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் எஸ்பிபி சரணின் விளையாட்டு இருக்கலாம் என சோனா தரப்பில் சந்தேகிக்கிறார்கள்.

"பாதிக்கப்பட்ட சோனா பணம் பறிக்கவோ, வேறு வகையில் பேரம் பேசவோ முயற்சிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு மாறாக பலாத்காரம் செய்த சரணுக்கு தண்டனை தரவேண்டும் என விரும்பினார். குறைந்தபட்சம் அவர் தனது செயலுக்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்றுதானே போராடி வருகிறார். ஆனால் எஸ்பிபி மகன் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி, சோனாவை கேவலப்படுத்துவதில் குறியாக உள்ளார். அதன் எதிரொலிதான் இதுபோன்ற காமெடி அறிவிப்புகள்," என்றார் அந்த நடிகர்.

திருந்துங்கப்பா!
 

இளைஞர் காங். தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் 'குத்து' ரம்யா திடீர் விலகல்


பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து நடிகை ரம்யா திடீர் என்று விலகியுள்ளார். காங்கிரஸின் பிறவிக் குணமான கோஷ்டிப் பூசல் காரணமாக ரம்யா விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

நடிகை குத்து ரம்யா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் கடந்த ஏப்ரல் மாதம் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். க்ர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

கட்சியில் சேர்ந்து 6 மாத காலத்திற்குள் ஒரு நடிகை மூத்த தலைவரைப் போல் செயல்படுவதாக மேலிடத்திற்கு புகார்கள் சென்றன. தலைவர் பதவிக்கு ஒரு கவர்ச்சி நடிகை போட்டியிடக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

கட்சியில் ரம்யாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் உள்ளது. இருப்பினும் அவருக்கு எதிராக குரல்கள் ஒலி்த்தன. இந்நிலையில் ரம்யா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ரம்யா ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
 

இயக்குநர் விஜய்யுடன் அமலா பால் காதலா?


நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ. எல். விஜய்யும் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் இதை அமலா பால் மறுத்துள்ளார்.

தெய்வத் திருமகள் படம் தொடங்கியதிலிருந்தே நடிகை அமலா பாலுக்கும் விஜய்க்கும் இடையே காதல் என்று பேசப்படுகிறது. எங்கே சென்றாலும் இருவரும் இணைந்தே சென்றுவந்தனர். விழாக்களில் ஜோடியாக ஒரே காரில் வந்தனர்.

ஷூட்டிங்கிலிருந்து ஒன்றாக வருகிறோம் என்று அப்போது விளக்கம் கூறினர். ஆனால் படம் வெளியாகிய பின்னும் இந்த நெருக்கம் தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு இப்போதும் ஜோடியாகத்தான் செல்கிறார்களாம்.

இது வெறும் நட்பாக மட்டும் இருக்க வாய்ப்பு குறைவு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதில் இருவீட்டு பெரியவர்களுக்கும் கூட சம்மதம் என்கிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில், சில தினங்களுக்கு முன் விஜய்யின் குடும்ப விழாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார் அமலா பால்.

கடந்த சனிக்கிழமை விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ எல் அழகப்பன் மணிவிழா நடந்தது. அதில் அமலா பால் கலந்து கொண்டு இயக்குநர் விஜய்யின் பெற்றோரிடம் ஆசி பெற்றார். உடன் விஜய்யும் நின்று கொண்டிருந்தார், முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்!

இந்த விழாவுக்கு அமலா பாலின் பெற்றோரும் வந்திருந்தார்கள். விழாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அனைவரும் உடனிருந்ததற்கு புதிய அர்த்தம் கற்பிக்கிறார்கள் திரையுலகில்.

இது நட்புதான் - அமலா

இதுகுறித்து அமலா பாலிடம் கேட்டபோது, "நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. காதல் திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்க உகந்த நேரம் இது வல்ல. நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறேன். திருமணத்துக்கு முன் 100 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன்," என்றார்.

நம்பிட்டோம்!