ஜீவாவை வைத்து புதுப்படம் தயாரிக்கும் 'டாக்டர் ராமதாஸ்' - தமிழ்க்குமரன்!

|


மருத்துவத் துறையில் பிரபலமாகத் திகழ்பவர் டாக்டர் வி ராமதாஸ். இப்போது சினிமா எடுக்க வந்துள்ளார். பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் இவர், கடந்த 2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதினை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து பெற்றவர்.

இப்போது திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தரமான படங்களை தயாரிக்கும் நோக்கோடு கோலிவுட்டுக்கு வந்துள்ளார். ஜிகேஎம் தமிழ்க் குமரனோடு இணைந்து இவர் தயாரிக்கும் புதிய படத்தை வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படவில்லை.

கவுதம் மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தில் நடிக்கிறார் ஜீவா. தந்தை மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது.

படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதால், உடனடியாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக நாயகன் ஜீவா தெரிவித்தார்.
 

Post a Comment