நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
1/19/2011 12:27:32 PM
நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கனவருடன் கனடாவில் இருந்தார் ரம்பா. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment