4/11/2011 10:10:16 AM
தெலுங்கில் நாக சைதன்யாவுடன் '100% லவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. படத்தின் தயாரிப்பாளர் தமன்னாவுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாகவும் இதனால், அவர் டப்பிங் பேச மறுத்துவிட்டதாகவும் தெலுங்கு பட உலகில் செய்திகள் பரவியுள்ளது. இதுபற்றி தமன்னா கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் என்னைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்தது. அதை நான் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது தயாரிப்பாளருக்கும் எனக்கும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்றே சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். தமிழ், தெலுங்கு பட உலகில் நடித்து வருகிறேன். இதுவரை யாரிடமும் எந்த பிரச்னையும் செய்ததில்லை. தயாரிப்பாளருடன் பிரச்னை என்ற செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு தமன்னா கூறினார்.
Post a Comment