ரூ.18 கோடி மதிப்பிலான நிலம் மோசடி- சினிமா இயக்குநர் மீது வழக்கு

|


நெல்லை: நெல்லையில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த சினிமா டைரக்டர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ரகுமத் பீவி. இவருக்கும், இவரது சகோதர, சகோதரிகளுக்கும் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை அருகில் ரூ.18 கோடி மதிப்பில் 3 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன், பர்கீஸ், ஆயிஷா, செய்யது மைதீன், பாத்திமுத்து, கோவில்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், ஆபிரகாம், சென்னையை சேர்ந்த பாண்டியன், கணேஷ் ஆகிய 9 பேர் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய்க்கு விற்று விட்டனர்.

இந்த விபரம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரகுமத் பீவி அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ரகுமத் பீவி புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ரகுமத் பீவி நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பேரில் மாநகர குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னரசு மற்றும் போலீசார் முகமது மைதின், பர்கீஸ், ஆயிஷா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் நிலமோசடி செய்த முகமது மைதீன் சினிமா இயக்குநராம்.
 

Post a Comment