கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து வெளியேறினார் மேக்னா. சுராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, நிகிதா, மேக்னா, சனுஷா என 4 ஹீரோயின்கள் ஜோடி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த மேக்னா திடீரென்று நடிக்க மறுத்து விலகினார். இது பற்றி அவர் கூறியது: சுராஜ் இயக்கும் படத்திலிருந்து விலகியது உண்மைதான். இப்படத்தில் எனக்கு தரப்பட்ட வேடம் திருப்தியாக இல்லை. இயக்குனர் எனக்கு நல்ல நண்பர். என் கருத்தை சொல்ல வாய்ப்பு தந்தார். விலக விரும்புவதாக தெரிவித்தபோது அந்த முடிவை ஏற்றுக்கொண்டார். எனது உணர்வை புரிந்துகொண்டார். மற்றொரு படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்றார். இப்போதைக்கு மலையாள படங்களில் நடிக்கிறேன். தமிழில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன். சில இயக்குனர்களுடன் பேச்சு நடக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் ஒப்புக்கொள்வேன். இவ்வாறு மேக்னா கூறினார்.
Post a Comment