தமிழில் 'வாமனன்', 'புகைப்படம்', '180' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா ஆனந்த். தற்போது, இந்திப் பட இயக்குனர் பால்கி தயாரிப்பில், அவர் மனைவி கவுரி இயக்கும், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறியதாவது: இது எனக்கு முதல் இந்திப் படம். ஷூட்டிங் முழுவதும் நியூயார்க்கில் நடந்தது. படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. இருந்தாலும் இதில் ஸ்ரீதேவியுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. அவரது நடிப்பை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது கிடைத்தது என் அதிர்ஷ்டம். ஏனென்றால் இந்தப் படம் மூலம் தான் அவர் ரீஎன்ட்ரி ஆகிறார். இதில் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கிலும் இந்தப் படம் டப் ஆகும் என்று நினைக்கிறேன்.
Post a Comment