மகேஷ் பாபுவின் 'அண்ணி'யாகிறார் அஞ்சலி!

|


நடிகை அஞ்சலி தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் அண்ணியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு. அவரது படத்தில் ஒரு அண்ணி கேரக்டர் உள்ளது. அதற்கு பொருத்தமான அதேசமயம், பிரபலமான நடிகையைத் தேடி வந்தனர். பல நடிகைகளும் அவருக்கு ஜோடியாக வேணும்னா நடிக்கிறோம், ஆனால் அண்ணி்யாக எல்லாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள அமலா பால் அந்த வேடத்தை முதலில் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அவர் ஜகா வாங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கு புது அண்ணி கிடைச்சாச்சு என்ற செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் புது அண்ணி நம்ம அங்காடித் தெரு அஞ்சலி தான் என்றார்கள். மகேஷுக்கு அண்ணியாக நடிக்க சம்மதித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுவிட்டாராம்.

தைரியமான பொண்ணு தான். இப்பத்தான் தனக்கென்று தமிழில் ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அண்ணியாக நடித்தால் என்ன, மகேஷ்பாபுவுக்கு அண்ணி என்றால் பேசப்படும் விதத்தில்தானே கேரக்டரும் இருக்கும்...
 

Post a Comment