ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம், 'சகுனி'. கார்த்தி, பிரணீதா, பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்கிறார்கள். படத்திற்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் பற்றி இயக்குனர் என்.ஷங்கர் தயாள் கூறியதாவது: 'சகுனி' அரசியல் படம் அல்ல. அரசியலை விமர்சிக்கும் படமும் இல்லை. ஹீரோ சந்திக்கின்ற நபர்கள் அரசியல் தொடர்பானவர்களாக இருப்பார்கள். பிரகாஷ் ராஜ், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். இந்த கதைக்கு அரசியல் களம்தான் சரியாக இருக்கும் என்பதால் அரசியல் பின்னணியை வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்கிறோம். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்சியல் படம். கார்த்தியின் மாஸ் ஆடியன்ஸை மனதில் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இம்மாத இறுதியில் படம் வெளியாகும். இவ்வாறு கூறினார்.
Post a Comment