'சிவாஜி 3டி' ட்ரெயிலர் - திங்கள் கிழமை வெளியீடு!

|

Sivaji 3 D Trailer Launch On Monday

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பின் ட்ரெயிலரை திங்கள்கிழமை வெளியிடுகிறது ஏவி எம் நிறுவனம்.

5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ரஜினியின் சிவாஜி தி பாஸ். 3 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் படமாக இருந்ததை, இரண்டே கால் மணி நேரமாக ட்ரிம் செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரெயிலரை வரும் திங்களன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் வெளியிடுகின்றனர்.

இதனை ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய பதிப்புக்கு 'சிவாஜி 3 டி' என தலைப்பிட்டுள்ளனர்.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் 3 டி படம் எனும் பெருமையுடன் சிவாஜி 3 டி வெளியாகிறது. அவரது அசத்தல் ஸ்டைல் மக்களை ஈர்க்கும் தோற்றம், இதுவரை இல்லாத புதிய அனுபவத்தை சினிமா ரசிகர்களுக்குத் தரப்போகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர் ஏவிஎம் நிறுவனத்தினர்.

செப்டம்பர் மாதம் படம் வெளியாகிறது.

 

Post a Comment