என் செல்போனிலிருந்து யாரோ எடுத்து வெளியிட்டுவிட்டனர்! - ஆன்ட்ரியாவை கிஸ்ஸடித்த அனிருத் பேட்டி

|

Anirudh Speaks On His Lip Lock Photo Leak

சென்னை: ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார்.

இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது.

நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.

 

Post a Comment