தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் நான்கு படங்களும் வைத்துக் கொண்டு, சக நடிகைகளின் பொறாமையை ஏகத்துக்கும் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா, தனக்கு ஏன் இவ்வளவு வாய்ப்புகள் குவிகின்றன என்பதற்கு விளக்கம் சொன்னார்.
அதில், "அனாவசியமாக யாரிடமும் நான் கோபித்துக் கொண்டதில்லை. சிரித்துக் கொண்டே இருப்பேன். என் சிரிப்பு மற்றவர்களையுமம கூலாக்கிவிடும். ஷூட்டிங் நேரம் தவறியதேயில்லை. யாருடனும் எனக்குப் போட்டியில்லை.
தயாரிப்பாளராக ஆசை உள்ளது. விரைவில் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்.
22 குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணிகள் எல்லாவற்றையுமே நானே கவனித்துக் கொள்கிறேன்.
சிறுவயதில் பண்டிகை நாட்களில் எனது அம்மா அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அங்கேதான் பண்டிகைகளை கொண்டாடுவோம். அப்போதிலிருந்தே ஆதரவற்றவர்கள் மேல் எனக்கு பாசம் அதிகம்.
வயதானவர்களை அவர்களின் பிள்ளைகளே ஒதுக்கி வைப்பது வேதனை அளிக்கிறது. இதுபோல் கைவிடப்படுகிறவர்களுக்காக முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டு உள்ளேன். சென்னை அல்லது ஐதராபாத்தில் இந்த இல்லத்தை கட்டுவேன்," என்று கூறியுள்ளார்.
Post a Comment