ஹீரோ வாரிசுகளை இயக்கும் பாலா?

|

Bala''s Next Choice

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலா தற்போது 'பரதேசி' படத்தை முடித்துவிட்டார். இந்த படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். வேதிகா மற்றும் தன்ஷிகா ஹீரோயினாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், பாலாவின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் வர தொடங்கிவிட்டன.

பாலா தனது அடுத்த படத்தில், இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவையோ அல்லது நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதமை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. கௌதம் தற்போது மணிரத்னத்தின் 'கடல்' படத்திலும் மற்றும் விக்ரம் பிரபு, எங்ககேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கத்திலும் பிசியாக இருக்கின்றனர். இந்த படங்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு பாலா, இருவரில் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க போகிறாராம்.

மேலும், பெரிய ஹீரோக்களை இயக்க பாலா தயங்குவதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. காரணம், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் போது அவர்களின் இமேஜ் தகுந்தவாறு பாலா எடுக்க மாட்டார், கதைக்கு ஏற்ப மாறும் ஹீரோவை பாலா விரும்புவார். அதே சமயம், விக்ரம், சூர்யா, ஆர்யா மற்றும் விஷால் போன் பெரிய ஹீரோக்கள் ஏற்கனவே பாலா படத்தில் நடித்துவிட்டனர். அவர்களை மீண்டும் நடிக்க வைக்க பாலா தயங்க மாட்டார் என்று கூறுகிறது பாலா தரப்பு.

இப்படி ஒரு பக்கம் பேசி வர, பாலா தனது அடுத்த படத்தில் விக்ரம் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக என சொல்லி வருகிறது இன்னொரு தரப்பு.
 

Post a Comment