ஆர்யாவுக்காக காத்திருக்கும் "ராஜா ராணி"

|

'Raja Rani' waits for Arya

ஷங்கரின் உதவியாளருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்க வாய்ப்பு தந்தார். பிரமாண்ட படங்களை இயக்கும் ஷங்கர் தற்போது 'ஐ' படத்தை இயக்கி வருகிறார். சொந்தமாக படங்களும் தயாரித்து தனது உதவியாளர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் மற்றும் சிம்புதேவன் உள்ளிட்டோருக்கு படம் இயக்க வாய்ப்பளித்தார். பின்னர் பட தயாரிப்பை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்து கதை சொன்னார்.

அக்கதை பிடித்துவிடவே தயாரிக்க சம்மதித்தார் முருகதாஸ். புதிய படத்துக்கு 'ராஜா ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா, ஜெய், நயன்தாரா நடிக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த 2 பாடல்களை கேட்டு பாராட்டினார். இதன் படப்பிடிப்பில் ஜெய், நயன்தாரா நடித்தனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மற்றொரு ஹீரோ ஆர்யா தற்போது கண்ணன் இயக்கும் 'சேட்டை' பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடித்தவுடன் 'ராஜா ராணி' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ஏற்கனவே 'எங்கேயும் எப் போதும்Õ என்ற படத்தை தயாரித்த முருகதாஸ் அப்படத்தை இயக்க தனது உதவியாளர் சரவணனுக்கு வாய்ப்பு தந்திருந்தார்.
 

Post a Comment