40 வயது ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? : அசின் பதில்

|

40-year-old heroes are playing with? : Asin's answer சம வயதுடையவர்களுடன் நடிக்காமல் 40 வயதான ஹீரோக்களுடன் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் அசின். கோலிவுட் படங்களிலிருந்து பாலிவுட்டுக்கு தாவினார் 27 வயதாகும் அசின். அங்கு 40 வயதை கடந்த ஆமிர்கான், சல்மான், அக்ஷய்குமார் போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சம வயதுள்ள ஷாஹித் கபூருடன் இந்தியில் ரீமேக் ஆகும் 'வேட்டைÕ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை. இதுபற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  40 வயதை தாண்டிய நடிகர்கள் என்பதைவிட இந்தியில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் நடிகர்களுடன் எனது பாலிவுட் பட வாழ்க்கையை தொடங்கினேன் என்பதுதான் சரி.

அதுதான் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதே நேரம் சம வயதுள்ள நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இவர்களுடன் ஷூட்டிங் தளத்தில் பழகும் தன்மை இதுவரை நான் பழகிய தன்மையிலிருந்து மாறுபட்டிருக்கும். தென்னிந்திய படங்களிலிருந்து வந்த ஹீரோயின்கள் பாலிவுட்டில் பெரிய அளவில் வெற்றி பெறாதது பற்றி கேட்கிறார்கள். ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாராலும் பாலிவுட்டில் வெற்றி பெற முடியவில்லை. இங்குள்ள கலாசாரத்தை புரிந்தவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை என்னால் செய்ய முடிந்ததுதான் வெற்றிக்கு காரணம். என்னைப்பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். யாருடனும் டேட்டிங் செய்வதில்லை என்பது அதில் முக்கியமானது. இவ்வாறு அசின் கூறினார்.
 

Post a Comment