1 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது மைக்கேல் ஜாக்சனின் கையுறை.

|

Michael Jackson S Crystal Encrusted Glove

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒருகோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பாப் இசை உலகின் சக்கரவர்த்தி என்று அவருடைய ரசிகர்களால் புகழப்படுபவர் மைக்கேல் ஜாக்சன். தனது பாடலாலும், இசையாலும், நடனத்தாலும் உலகம் முழுவதும் பலகோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். உடல்நலக்குறைவினார் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணமடைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்னும் மங்காமல் ஒளிவீசுகிறது. அவருடைய பொருட்களை பொக்கிஷமாக கருதும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இசை நிகழ்ச்சியின் போது மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. அவற்றை அதிக விலை கொடுத்து அவரது ரசிகர்கள் வாங்கி செல்கின்றனர்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேல் ஜாக்சனின் கையுறை ஒன்று சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அது ரூ.1 கோடிக்கு ஏலம் போனது. இந்த தகவலை ஏல மையத்தின் உரிமையாளர் நேட்டி சாண்டர்ஸ் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த ஏலத்தில் பிரபல பாப் இசைப்பாடகி காகா, மைக்கேல் ஜாக்சனின் 55 பொருட்களை ஏலத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment