சென்னை : ‘கும்கி' படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி பார்ட்டி கொடுத்து தங்கசங்கிலி பரிசளித்துள்ளார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கும்கி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கும்கி படக்குழுவினருக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது கும்கி படத்தில் நடித்த நடிகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தங்கச் சங்கிலி பரிசளித்தார்.
இந்த நிறுவனத்தினர் தயாரித்த வழக்கு எண் 18/9 திரைப்படம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக அந்த திரைப்படக்குழுவினரும் இந்த விருந்தில் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கார்த்தி, பிரபு, ராம்குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment