லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம்: மேலாடை கிழிந்தது!

|

Fans Misbehave With Lakshmi Rai   

புதுவை: புதுச்சேரியில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்த நடிகை லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்ததில் அவரது மேலாடை கிழிந்தது.

பி.டி. செல்வகுமார் இயக்கத்தில் வினய், லஷ்மி ராய் நடித்து வரும் படம் ஒன்பதுல குரு. இந்த படத்தில் ஒரு டூயட் பாடலை புதுச்சேரியில் படமாக்கினர். ஷூடிட்ங் இடைவேளையில் லக்ஷ்மி ராயிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது கூட்டம் கூடியதுடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ரசிகர்கள் லக்ஷமி ராயிடம் சில்மிஷம் செய்தனர். இதில் அவரது மேலாடை கிழிந்தது. நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த படக்குழுவினர் ஓடிவந்து லக்ஷ்மி ராயை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு லக்ஷ்மி ராய் அவரது ஹோட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படப்பிடிப்பில் நடிகைகளிடம் ரசிகர்கள் சில்மிஷம் செய்வது இது முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பதுல குரு படத்தில் பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஞ்சலி, ச்தயன், மந்த்ரா மற்றும் ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 

Post a Comment