திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் குழந்தைகள் என்றால் அதிக விருப்பம் என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.
சங்கீதா பிஜ்லானி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் என அழகு தேவதைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ சல்மான்கான். அது என்ன ராசியோ தெரியவில்லை இவருடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோயின்கள் சிலர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்.
47 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் சூப்பர் ஹிட் படங்களை கொடுப்பதிலேயே கவனம் செலுத்தும் சல்மான்கானுக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அதேசமயம் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்கிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள ரெடியாக இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை கூகுள் ப்ளஸ்சில் ரசிகர்களுடன் சாட் செய்யும் போது கூறியுள்ளார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நேற்று கூகுள் பிளஸ்ஸில் ரசிகர்களுடன் வீடியோ சேட் செய்தார் சல்மான். அப்போது ரசிகர்கள் அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அவரும் சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். அதற்கு சல்மான் கான் கூறிய பதில் இதுதான்:
"திருமணமா, எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம். எனக்கு குழந்தைகள் வேண்டும். திருமணமாகாமல் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன்" என்றார்.
அது எப்படி யோசித்த ரசிகர்கள் அதற்குப் பிறகு என்ன கேட்பது என்று பேசாமல் விட்டுவிட்டனராம். ஏற்கனவே திருமணம் பற்றிய கேள்விக்கு கோர்ட் கேஸ் முடிந்த பின்னர் யோசிக்கலாமே என்று கூறியிருந்தார் சல்மான்கான்.
Post a Comment