மும்பை: தனக்கு 2 வயது இருக்கையில் முதன்முதலாக பிகினி அணிந்ததாக பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிகினி காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிகினி காட்சியில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் தூம் 2, பிளேயர்ஸ் படங்களில் பிகினியில் வந்த பிபாஷா பாசு கூறுகையில்,
எனக்கு 2 வயது இருக்கையில் என் தந்தை ஆஸ்திரேலியாவில் இருந்து பிகினி வாங்கி வந்து கொடுத்தார். அந்த பிகினி அணிந்து எடுத்த போட்டோவில் நான் மிகவும் அழகாக இருப்பேன். அப்பொழுதில் இருந்தே எனக்கு சூரியன் மற்றும் கடற்கரை என்றால் கொள்ளைப் பிரியம். திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் பிகினி அணிவது எனக்கு சவுகரியமானது என்றார்.
பிகினியில் எந்த நடிகை நன்றாக இருப்பார் என்று கேட்டதற்கு, ஜீனத் அமன் என்றார் பிப்ஸ். தற்போது அனைத்து பெண்களுமே பிட்டாக, ஹாட்டாக உள்ளனர். அதனால் யார் வேண்டும் ஆனாலும் பிகினியில் அழகாக இருக்கலாம் என்றார்.
Post a Comment