செந்திலுக்கு வயசு 60... திருக்கடையூரில் கொண்டாடினார்!

|

நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 60 - வது பிறந்தநாளை சத்தமே இல்லாமல், திருக்கடையூரில் உள்ள கோவிலில் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்பவர் செந்தில். பொய் சாட்சியில் முதன் முதலாக அறிமுகமானார் செந்தில். அவரை பெரிய நடிகராக்கியது தியாகராஜனின் மலையூர் மம்பட்டியான் படம்.

actor senthil celebrates his 60th birthday   
காமெடி கிங் கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடித்த அத்தனைப் படங்களிலும் நகைச்சுவை சூப்பர் ஹிட்டானது.

கவுண்டர் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியதும், செந்திலுக்கும் கட்டாய ஓய்வு ஏற்பட்டது. ஆனாலும் அவரது காமெடி தொலைக்காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளது. அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று செந்தில் தன் 60 வது ஆண்டு பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். திருக்கடையூரில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் செந்திலும் அவர் மனைவி கலைச்செல்வியும் மாலை மாற்றிக் கொண்டனர்.

 

Post a Comment