அமெரிக்க மாப்பிள்ளை தயார்... திருமணத்துக்குத் தயாராகும் அசின்?

|

Asin Marry Us Citizen   

அமெரிக்காவில் செட்டிலாகியுள்ள கோடீஸ்வர இந்திய இளைஞரை அசின் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த அசின், மும்பையில் செட்டிலாகிவிட்டார். 6 இந்திப் படங்களில் இதுவரை அவர் நடித்துள்ளார். அவற்றில் நான்கு படங்கள் ரூ 100 கோடிக்கும் மேல் வசூலித்தவை.

ஆனாலும் அசின் புதிய படங்கள் எதையும் இப்போது ஒப்புக் கொள்ளவில்லை. தமிழில் மட்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவரை நடிக்க வைக்க பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே அசின் கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒரு முறையாவது அமெரிக்கா சென்று வருவது வழக்கமாகிவிட்டது.

அங்குதான் அசினின் உள்ளம் கவர்ந்த இளைஞர் இருக்கிறாராம். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், புதிய படங்களை அசின் ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் பாலிவுட்டில்.

கடைசியாக தமிழில் ஒரு படம் நடித்துவிட்டு திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டிருக்கிறார் அசின் என்கிறார்கள்.

 

Post a Comment