பிரபல இயக்குநர் பாஸில் மகன் பகத்தை நான் காதலிக்கவும் இல்லை... இனி அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
நடிகை ஆன்ட்ரியாவும், நானும் காதலிக்கிறோம் என்று மலையாள நடிகர் பகத்பாசில் சமீபத்தில் அறிவித்திருந்தார். இருவரும் அன்னயும் ரசூலும் என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர்.
இதில் ஆன்ட்ரியாவுடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என்றும் பகத் பாசில் கூறினார். இதற்கு ஆன்ட்ரியா கண்டனம் தெரிவித்ததோடு, அவர் காதலையும் ஏற்க மறுத்து விட்டார்.
'ஒரு படத்தில் சேர்ந்து நடிச்சா காதல் வந்திடுமா.. என்ன இது சின்ன புள்ளத்தனம்', என பகத் பாசிலுக்கு போன் போட்டு திட்டியும் விட்டாராம்.
இதன் பிறகு, இருவரையும் இன்னொரு படத்திலும் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அந்த படத்திலிருந்தும் ஆன்ட்ரியா விலகி விட்டார். இனி அந்த ஆள் கூட சேர்ந்து நடிக்க மாட்டேன்... படமே வேண்டாம், என்று கறாராகக் கூறிவிட்டாராம்.
Post a Comment