சென்னை: ஒரு வருடத்தில் பாதி நாட்கள் தான் அமெரிக்காவில் இருப்பதற்கான காரணத்தை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் அமெரிக்காவில் செட்டிலாகப் போவதாக செய்திகள் வருகின்றன. நான் இங்கு செய்யும் வேலையைத் தான் அங்கும் செய்கிறேன். அமெரிக்காவில் எனக்கு சொந்தமாக ஒரு வீடு, ஸ்டுடியோ இருக்கிறது. அமெரிக்கா எனக்கு வசதியாக இருக்கிறது. அங்கு நான் சாலையில் ஃப்ரீயாக நடக்கலாம், சாலையோரம் இருக்கும் கடைகளில் காபி சாப்பிடலாம். என்னை யாரும் தொந்தரவு செய்வதில்லை. எனக்கு அது தான் வேண்டும். அதனால் தான் ஒரு வஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவிலேயே இருக்கிறேன். மற்றபடி வேறு காரணம் எதுவும் கிடையாது.
நான் மலையாளப் படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இருக்கின்ற வேலையைப் பார்க்கவே நேரம் இல்லை. இதில் எங்க போய் நடிக்க என்றார்.
Post a Comment