அஜீத்தின் 54வது படத்தின் பெயர் விநாயகம் பிரதர்ஸ்?

|

Ajith Film With Siva Titled Vinayagam Brothers

சென்னை: அஜீத் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உறுதிபடுத்தவில்லை. இந்த நாள் வரை அந்த படத்திற்கு பெயரிடப்படவில்லை. இதனால் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பாவது பெயரை அறிவிப்பார்களா என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு தமன்னா ஜோடியாக நடிக்கிறார். காமெடிக்கு சந்தானம் உள்ளார். இந்த படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ் என்று தலைப்பு வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் அஜீத்தின் பெயர் விநாயகம் என்பதால் விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்த தகவலை நம்ப அஜீத் ரசிகர்கள் தயாராக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அறிவிக்கும் வரை நம்ப மாட்டோம் என்று அடம்பிடிக்கின்றனர். அவர்கள் சொல்வதும் நியாயம் தானே.

 

Post a Comment