மணிவண்ணனுக்கு பாரதிராஜா அஞ்சலி - மாலையில் உடல் தகனம்

|

சென்னை: மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

bharathiraja pays tribute manivanna

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை உடல் தகனம் நடைபெற்றது. இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

பாரதிராஜா வந்தார்

மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

 

Post a Comment