சென்னை: நடிகர் கமல்ஹாஸனின் பேஸ்புக் பக்கத்தில் அவரைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை நேற்று 6 லட்சத்தைத் தாண்டியது. இதுவே தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கம் என கமல் ஒப்புதலளித்துள்ளார்.
இணைய வெளியை அதிகம் பயன்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாஸன். தன்னைப் பற்றிய செய்திகள், படங்களை இந்தப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
கமல் சார்பில் இந்த வேலைகளைச் செய்வது அவரது மய்யம் குழுதான்.
கடந்த மாதம், கமல்ஹாஸன் ட்விட்டரிலும் தனி பக்கம் தொடங்கியதாக செய்திகள் வெளியாக, அதை உடனே மறுத்திருந்தார் கமல். தனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை என்று தனது பிஆர்ஓ மூலம் அறிவித்தார்.
இந்த நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இது கமலின் அதிகாரப்பூர்வ ஒரிஜினல் பேஸ்புக் பக்கம்தான் என்பதைக் குறிக்கும் வகையில், அந்தப் பக்கத்துக்கு நீல நிற டிக் மார்க் குறி போடப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் கமல் ஹாஸன் என்ற பெயரில் பல பக்கங்கள் உள்ளன. அவற்றில் இதுதான் தனது ஒரிஜினல் பக்கம் என கமல் சான்றளித்துள்ளதால், அந்தப் பக்கத்துக்கு இந்த நீலக்குறியீடு தரப்பட்டுள்ளது.
Post a Comment