7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

|

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

நியூயார்க்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான டாம் குரூஸ் தன் செல்ல மகளின் பாதுகாப்பிற்காக வாரம் ரூ 29,76,150செலவிடுகிறாராம்.

50 வயதான டாம் , தனது 7வயது மகள் சூரியின் பாதுகாப்பிற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறாராம். தனது தாயோடு நியூயார்க்கில் வாழ்ந்து வரும் சூரியைச் சுற்றி 24 மணி நேரம் பாதுகாப்புப்படையினர் உள்ளனராம்.

இது குறித்து டாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், ‘டாமைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் பாதுகாப்பு அரணாக கலர் டிரெஸ்ஸில் இருப்பார்கள். தற்போது அவர் மகள் சூரிக்கு இருமடங்காக நான்கு பேர் பாதுகாப்புக்கு உள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு பணியில் உள்ளவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாம். மேலும், அதிகாரப் பூர்வமாக ஆயுதம் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment