நடிகை சிம்ரன் கடத்தல்… சென்னையை கலக்கிய பரபரப்பு போஸ்டர்கள்

|

Simran Missing Posters Rock Chennai

நடிகை சிம்ரன் கடத்தப்பட்டதாக சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதைக்கண்ட பலரும் சிம்ரனை யார் கடத்தியது. போஸ்டர் உண்மையா? போலியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியபடி சென்றனர்.

இன்று காலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், ரோட்டோர சுவர்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதைக்கண்ட பலரும் ஆர்வத்துடன் அதனை படித்தனர். சிம்ரன் கடத்தப்பட்டது நிஜமா என்று பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து பலர் விசாரித்தனர்.

கடத்தியது யார்?

நடிகை கடத்தல் என்றாலே பலருக்கும் ஆர்வம்தான். அதுவும் ஃபீல்டில் பிஸியாக இருக்கும் போது கடத்தாமல் சிம்ரனை இப்போது கடத்தியது யார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

விளம்பரமாம்பா...

இந்த போஸ்டர் டி.வி. நிகழ்ச்சிக்கான விளம்பரம்தான் என்று பின்னர் தெளிவானது. பிரபல டி.வி. சேனல் ஒன்றில் ‘கேம்ஷோ' ஒன்றை சிம்ரன் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு வருடம் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்துகிறார். அதற்காகவே இப்போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

நல்லா கிளப்புறாங்கப்பா பீதி

பிரபல சேனல் ஒன்றில் ஜாக்பாட் நடத்தி வரும் சிம்ரன் கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் தீபக்கை கதாநாயகனாக வைத்து புதுப்படம் தயாரிக்க திட்டமிட்டார். அது நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment