பெங்களூர்: கன்னட நடிகர் ஹேமந்த் குமார் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 24.
நேனபினங்களா என்ற கன்னடப் படத்தில் சுப்ரிதா, ரமேஷ் பட், கரிபசவய்யா, சுதா பெலவாடி ஆகியோருடன் நடித்தவர் ஹேமந்த் குமார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடித்திருந்தார்.
தொட்டபெல்லபுதூரில் பிறந்த ஹேந்த் குமார் குறித்து, அவரை இயக்கிய தனுச்சந்திர மவினகுன்டே கூறுகையில், "நல்ல திறமையான நடிகர். செட்டில் ரொம்ப உற்சாகமாக இருப்பார். கன்னடத் திரையுலகுக்கு அவரை மாதிரி நிறைய இளம் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அவரை என் அடுத்த படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருந்தேன். படத்துக்கு தலைப்பை அறிவிக்க திட்டமிட்டிருந்த போது அவர் இப்படி அகாலமாக இறந்துவிட்டார்," என்றார்.
மாரடைப்பு காரணமாகவே ஹேந்த் குமார் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment