2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா!

|

2டி என்டர்டெயின்ட்மென்ட்: சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்த சூர்யா!

சென்னை: தனக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிறுவனத்துக்கு 2டி என்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஏற்கெனவே சூர்யாவின் குடும்பத்தினர் ஸ்டுடியோ கிரீன் என்ற பெயரில் படம் தயாரித்து வருகின்றனர்.

இதனை சூர்யாவுக்கு தம்பி முறையான ஞானவேல் ராஜா நடத்தி வருகிறார். சூர்யா - கார்த்தியின் சமீப காலப் படங்களில் பெரும்பாலானவற்றை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

இன்னொரு பக்கம் ஸ்டுடியோ கிரீன் கிட்டத்தட்ட கார்த்தியின் சொந்தப் பட நிறுவனம் மாதிரி மாறிவிட்டது. அவரது அனைத்துப் படங்களையுமே ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிக்கிறது.

எனவே சூர்யா தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 2டி என்டர்டெயின்மென்ட் ('2D Entertainment') என்று தலைப்பிட்டு இருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறாராம். சூர்யாவின் முதல் குழந்தை பெயர் தியா. இரண்டாவது குழந்தை பெயர் தேவ்.

இந்த நிறுவனத்தின் மூலம் சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் சூர்யா.

 

Post a Comment