தற்கொலைக்கு முன் ஜியா மது அருந்தியிருந்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

|

மும்பை: சென்ற மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஹிந்தி நடிகை ஜியாகான், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மது அருந்தியது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

காதல் தோல்வியால், ஜூன் 3ம் தேதி மும்பையில் ஜூஹு அப்பார்ட்மெண்டில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் 25 வயது அழகு நடிகையான ஜியாகான்.

தற்கொலைக்கு முன் ஜியா மது அருந்தியிருந்தார்: பிரேத பரிசோதனையில் அம்பலம்

ஜியாவின் தற்கொலைக்குப் பிறகு அவர் கைப்பட எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றை வீட்டில் கண்டெடுத்த அவரது தாயார், பின்னர் அதனை போலீஸ் வசம் ஒப்படைத்தார். அதில் நடிகர் சூரஜ் உடனான தனது காதல் தோல்வியை விவரித்திருந்தார் ஜியா.

அக்கடிதத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ் கிட்டத்தட்ட 21 நாட்களை சிறையில் கழித்தபின்னர், சென்ற வாரம் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில், போலீஸ் வசம் சமர்ப்பிக்கப் பட்டுள்ள ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜியா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

 

Post a Comment