சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் கூறுகையில்,
மஞ்சுளா சித்திக்கு வயிற்றில் கட்டில் கால் குத்தியதில் ரத்தம் உறைந்திருக்கிறது. அதை அகற்ற சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது மற்ற உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
Post a Comment