பெற்றோர் சம்மதத்துடன் அடுத்த ஆண்டே ஹகன்சிகாவுடன் திருமணம் என்று சிம்பு கூறிவரும் நிலையில், நிறைய சாதித்துவிட்டு நிதானமாக சிம்புவை திருமணம் செய்யப் போவதாக ஹன்சிகா கூறியுள்ளார்.
சிலம்பரசனுடனான காதல், அதுகுறித்து சிலம்பரசன் அளித்துள்ள பேட்டி குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "நானும், சிலம்பரசனும் காதலிப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் நன்கு புரிந்து கொண்டுதான் காதலிக்கிறோம்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதும் உண்மைதான். ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை.
சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கிறது. அதையெல்லாம் சாதித்து முடித்து விட்டு, சிலம்பரசனை திருமணம் செய்து கொள்வேன்.ய
சில மாதங்களாகவே நாங்கள் காதலித்து வந்தாலும் சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவே காதலை மறைத்து வந்தேன். இந்த விஷயத்தில் நான் முன்பு சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள். ப்ளீஸ்,'' என்றார்.
ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இந்த காதல் விவகாரம் குறித்து நான்கு தினங்களுக்கு முன் கேட்டபோது, "சிம்புவுடன் காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. இதெல்லாம் பத்திரிகைகளின் வேண்டாத வேலை. அவர் எனக்கு நண்பர்தான். ஏன்தான் இப்படியெல்லாம் எழுதி என்னையும் என்னை வைத்து படமெடுப்போரையும் சங்கடத்துக்குள்ளாக்குகிறீர்களோ," என்று கோபத்துடன் கேட்டார்.
அடுத்த நாளே காதலை உறுதிப்படுத்தினார், அதுவும் எழுத்துப்பூர்வமாக.
அம்மணி, கொஞ்ச நாள் கழித்து இதே வார்த்தைகளை பிரிவுக்கும் பயன்படுத்தாமல் இருப்பீராக!!
Post a Comment