லாஸ் ஏஞ்சலெஸ்: பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைப் பார்க்க அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து ஜஸ்டின் தூவென்று துப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள ஒரு ஹோட்டலில் பீபர் தங்கியிருந்தார். இதையடுத்து அவரைப் பார்க்க திரளான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்தனர்.
அப்போது பால்கனிக்கு வந்த ஜஸ்டின் தனது ரசிகர்கள் பெரும் திரளாக கூடியிருப்பதைப் பார்த்தார். பின்னர் திடீரென கீழே நோக்கி தூ வென்று துப்பினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைப் பார்த்த ஜஸ்டின் சுதாரித்துக் கொண்டு உள்ளே போய் விட்டார். பின்னர் அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில், இன்று காலை நான் விழித்து எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான் என்று ஐஸ் வைத்து பேசியிருந்தார்.
துப்பிட்டுப் பேசுற பேச்சைப் பாரு...!
Post a Comment