லாஸ் ஏஞ்சலெஸ்: சருமப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைததுள்ளார் நடிகை மைலி சைரஸ்
பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ், டிசைனர் மார்க் ஜேக்கப்பின் சரும புற்றுநோய் நிதி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக இந்த நிர்வாண போஸைக் கொடுத்துள்ளார்.
20 வயதான மைலியின் இந்த நிர்வாணப் படத்தை, டிசைனர் மார்க், தனது சருமப் புற்றுநோயிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்திற்குப் பயன்படுத்தவுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியானது, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சருமப் புற்றுநோய் மையத்திற்கு அளிக்கப்படவுள்ளது.
தான் நிர்வாண போஸ் கொடுத்தது குறித்து டிவி்ட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் மைலி.
இந்தப் புகைப்படத்தில் ஆடை எதுவும் இல்லாமல் இருக்கிறார் மைலி. தனது இரு கைகளால் அந்தரங்கப் பகுதிகளை மறைத்தபடி காட்சி தருகிறார். படத்தில், உங்களது சருமத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
Post a Comment