எனக்கு சான்ஸ் தாருங்களேன்... ரேவுக்கு கடிதம் எழுதிய வித்யா பாலன்

|

எனக்கு சான்ஸ் தாருங்களேன்... ரேவுக்கு கடிதம் எழுதிய வித்யா பாலன்

கொல்கத்தா: சத்யஜித் ரேவுக்கு கடிதம் எழுதி தனக்கு நடிக்க வாய்ப்பு தருமாறு ஒருமுறை கேட்டாராம் நடிகை வித்யா பாலன்.

இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இன்று திகழ்கிறார் வித்யா பாலன்.

ஆரம்பத்தில் அவர் நடித்த படங்களை விட சில வருடங்களுக்கு முன்பு நடித்த டர்ட்டி பிக்சர்ஸ்தான் வித்யா பாலனுக்கு மிகப் பெரிய முகவரியாக மாறியது.

இந்த நிலையி்ல சத்யஜித் ரே படத்தில் நடிக்க ஒரு காலத்தில் உயிராக இருந்தாராம் வித்யா. மேலும் இதுதொடர்பாக அவர் ரேவுக்கு கடிதமும் எழுதினாராம்.

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், அப்போது சத்யஜித் ரேவுக்கு உடல் நலம் சரியில்லை. அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் சீக்கிரம் நலம் பெற்று வாருங்கள். உங்களது படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று எழுதியிருந்தேன் என்றார் வித்யா பாலன்.

 

Post a Comment