நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

|

சென்னை: மறைந்த நடிகை மஞ்சுளாவின் உடலுக்கு நேற்று சென்னையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

நேற்று தன் ஆலப்பாக்கம் வீட்டில் கீழே விழுந்ததில் கட்டில் கால் குத்தி வயிற்றில் அவருக்கு பலமாக அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மஞ்சுளா, சிகிச்சை பலனின்று இறந்தார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

சூப்பர் ஸ்டார் ரஜினி செவ்வாய்க்கிழமை மாலை மஞ்சுளாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் சௌந்தர்யாவும் வந்திருந்தார். ரஜினியைப் பார்த்ததும் விஜயகுமார் கதறி அழ, ரஜினியும் அவரைக் கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.

விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள்கள் ரஜினியிடம் வந்து கதறி அழுதனர். அவர்களுக்கு ரஜினி ஆறுதல் கூறினார்.

ரஜினி வருவதற்கு முன்பே ஐஸ்வர்யா தனுஷ் வந்து அஞ்சலி செலுத்தினார்.

நேற்று மருத்துவமனையில் மஞ்சுளா சேர்க்கப்பட்டபோதே, நேரில் போய் அருகிலிருந்து பார்த்துக் கொண்டார் லதா ரஜினி.

நடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி

ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்று பிற்பகல் போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

Post a Comment