சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்

|

சென்னை: நடிகர் சரத்குமார் வேண்டுமென்றே விடியல் படத்தை இழுத்தடிப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சரத்குமார் - சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். இதுவும் சரித்திர கால படம்தான். கேஎஸ் செல்வராஜ் இயக்கத்தில் அவ்வப்போது தொடர்பதும், பாதியில் நிற்பதுமாக கிடப்பில் உள்ளது இந்தப் படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் குதிரையிலிருந்து விழுந்து இடுப்பெலும் உடைந்து சிகிச்சைப் பெற்றார் சரத்குமார். அதன் பிறகு படம் குறித்த தகவலேதுமில்லை.

சரத்குமார் வேணும்னே விடியலை இழுத்தடிக்கிறார் - தயாரிப்பாளர் புகார்  

இந்த நிலையில் படத்தின் நாயகி சினேகாவுக்கு திருமணமாகிவிட்டது. சரத்குமார் வேறு படங்களைத் தயாரிப்பது, மலையாளத்தில் நடிப்பது, அரசியல் என பிஸியாகிவிட்டார்.

இப்போது படம் ஆரம்பித்து நான்காண்டுகள் ஆகியும் முடியாத கடுப்பில் சரத்குமார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுந்தரராஜன்.

அதில், ரூ நாலேகால் கோடிக்கு விடியல் படத்தைத் தயாரித்துத் தருவதாக சரத் கூறியதால், முதல் கட்டமாக ரூ 91 லட்சம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தோம். ஆனால் எங்கள் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, தன் சொந்தப் படமான சென்னையில் ஒரு நாளை வெளியிட்டுள்ளார்.

எனவே அவரிடம் நாங்கள் கொடுத்த பணத்தை வட்டியும் முதலுமாகத் திருப்பித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment