பிறந்தநாளில் உடல் உறுப்புதானம் செய்தார் பாடகி சுசித்ரா

|

பிரபல பாடகி சுசித்ரா தனது பிறந்தநாளை ஒட்டி உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

தற்போது பிரபல பாடகியாக உள்ள சுசித்ரா எப்.எம் ரேடியோவில் ரேடியோவில் பணியாற்றிவர். இதனைத் தொடர்ந்து ‘காக்க காக்க‘ படத்தில் ‘உயிரின் உயிரே.'., ‘மன்மதன்‘ படத்தில் ‘என் ஆசை மன்மதனே', ‘போக்கிரி படத்தில், ‘என் செல்லப்பேரு ஆப்பிள்' உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் ஹீரோயின்கள் சிலருக்கு டப்பிங் பேசியிருப்பதுடன், சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 14ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய சுசித்ரா தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார்.

பிறந்தநாளில் உடல் உறுப்புதானம் செய்தார் பாடகி சுசித்ரா

இதுபற்றி சுசித்ரா கூறும்போது, சென்னையில் உள்ள ‘நேஷனல் நெட்ஒர்க் ஃபார் ஆர்கன் ஷேரிங்' அமைப்பிடம் இதற்கான விண்ணப்பம் தந்தோம். எனது பிறந்த தினத்தின்போது சேவை நோக்கோடு உதவும்போது அதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் இதுபோன்ற செயல்களை வெளியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் இதைப்பார்த்து மேலும் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருவார்கள்என்றார்.

உறவினர்கள் மகிழ்ச்சி

உடல்உறுப்பு தானம் செய்ய உள்ளதாக எனது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆதரவு சொன்னதுடன் என்னுடன் சேர்ந்து அவர்களும் தானம் செய்ய முன்வந்தனர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சுசித்ரா.

 

Post a Comment