ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை!- போலீசிடம் தயாரிப்பாளர்

|

சென்னை: மாவட்டங்களில் உண்ணாவிரதமிருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை என்ரு படத்தின் தயாரிப்பாளர் போலீசில் தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் தமிழகமெங்கும் கொந்தளித்து வருகின்றனர். திருட்டு டிவிடி விற்பவர்களுடன் சண்டைபோட்டு, டிவிடிகளை அழித்து வருகின்றனர்.

ரசிகர்கள் உண்ணாவிரதத்துக்கும் தலைவா படத்துக்கும் சம்பந்தமில்லை!- போலீசிடம் தயாரிப்பாளர்

சேலம், நாமக்கல், விழுப்புரம் போன்ற பகுதிகளில் விஜய் ரசிகர்கள் தலைவா படத்தை வெளியிடக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் சென்னையிலும் தலைவா படக்குழுவினர் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை சந்திரபிரகாஷ் ஜெயின், டைரக்டர் ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் திடீரென போலீஸ் கமிஷனரை சந்திக்க கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

என்ன காரணமோ தெரியவில்லை. அவர்கள் கமிஷனரை சந்திக்கவில்லை. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் நல்லசிவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் வெளியில் வந்த அவர்கள், 'தலைவா படத்திற்கு பாதுகாப்பு கேட்டு வந்திருக்கிறோம். திருட்டு சிடி வெளியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசிடம் மனு கொடுத்துள்ளோம்', என்றனர்.

அப்போது, தமிழகத்தில் சில இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம் அறிவித்து உட்கார்ந்து விட்டிக்கிறார்களே, என்று கேட்டனர் போலீசார்.

அதற்கு விஜய் தரப்பில், "ரசிகர்கள் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. விஜய்க்கு இதில் உடன்பாடில்லை. படத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் இருந்தால் நஷ்டம் ஏற்படும். அதேவேளையில் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் திருட்டு சிடியில் பார்த்துவிட்டால், படம் வெளியானாலும் பெரும் நஷ்டம் ஏற்படும். இதிலிருந்து தங்களை காப்பாற்றி கைதூக்கிவிட்டால் போதும்," என்றனர்.

 

Post a Comment