இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

|

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

சென்னை: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை அஞ்சலி தன்னுடைய சொத்தை அபகரிக்க இயக்குனர் களஞ்சியம் அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அஞ்சலி தலைமறைவாகிவிட்டு சில நாட்கள் கழித்து அவரே திரும்பி வந்தார். இதற்கிடையே தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

தலைமறைவாக இருந்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment